பக்கம் எண் :

668கிட்கிந்தா காண்டம்

 பின்னை யான் நிரப்புதல்
      பிழைப்பு இன்றாகுமால்'
என்ன, மாருதி எதிர்,
      எருவை வேந்தனும்,
தன்னை ஆம் தன்மையைச்
      சாற்றல் மேவினான்;

     (அது கேட்டு)மாருதி -அனுமன்;உன்னை நீ உள்ளவாறு
உரைப்பின் -
உன்னைப் பற்றி நீ உள்ளபடியே கூறினால்;பின்னை -பிறகு;
யான் உற்றதை நிரப்புதல் -
நான் நடந்த வரலாற்றை விரிவாகக் கூறுவது;
பிழைப்பு இன்றாகும் -
தவறு இல்லாததாகும்;என்ன -என்று (சம்பாதியை
நோக்கிக்) கூற;எதிர் -எதிரே நின்ற அனுமனிடம்;எருவை வேந்தனும் -
கழுகரசனான சம்பாதியும்;தன்னை ஆம் தன்மையை -தன்னைப பற்றிய
வரலாற்றை;சாற்றல் மேயினான் -சொல்லத் தொடங்கினான்.

     ஆல் : ஈற்றசை.

     பிழைப்பு - தவறு.  முதலடி முற்றுமோனையாகவுள்ளது.           30

4678.'மின் பிறந்தாலென
      விளங்கு எயிற்றினாய்!
என், பிறந்தார்க்கு இடை
      எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை
      பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன்' என
      முடியக் கூறினான்.

     மின் பிறந்தாலென -(சம்பாதி அனுமனை நோக்கி) மின்னல்
தோன்றியது போல;விளங்கு எயிற்றினாய் -விளங்குகின்ற பற்களை
யுடையவனே! பிறந்தார்க்கு இடை எய்தலாத என் -உடன் பிறந்தவர்
பொருட்டுச் சோர்தல் அடையாத நிலை ஏது?என் பின்பிறந்தான் -
எனக்குப் பின் பிறந்தவனாகிய;துணை பிரிந்த -(என்) சகோதரனைப் பிரிந்த;
பேதையேன் -
எளியவனாகிய நான்;முன் பிறந்தேன் -(அந்தச்
சடாயுவுக்கு) அண்ணனாகப் பிறந்தேன்;என -என்று;முடியக் கூறினான் -
தன் வரலாற்றை விளங்கக் கூறினான்.

     சடாயு என்பவன் தன் தம்பி; நான் அவனுக்கு முன் பிறந்தவன் என்பது.

     'இளையவன் இறக்க மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கின்றேனே'
என்ற இரக்கம் தோன்றுமாறு 'என் பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன்' என்றான் சம்பாதி.  உடன்பிறந்தவர்கள் துன்பமுற நேர்ந்தால்
சோர்வடையாத நிலை உண்டோ என்று சம்பாதி கேட்டான். சடாயுவின்
மரணத்தால்