வீர -வீரனே! (இராவணன்);ஒன்றா -(தனக்கு) இணங்கி வராத; மூன்று உலகத்து உளோரையும் -சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவலகங்களில் உள்ளவர் அனைவரையும்;வென்றான் என்னினும் - வென்றான் என்றாலும்;அவ் அரக்கன் நிற்கு நேர் நின்றானே -(போரில்) அந்த அரக்கனாகிய இராவணன் உனக்கு எதிராக வந்து நின்றானா? நின்னையும் கொன்றானே -உன்னையும் கொன்றானா? இது என்ன கொள்கையோ -இது என்ன வியப்பான நிகழ்ச்சியோ? மூவுலகத்தையும் வென்ற அந்த இராவணனைவிட நீ மிக்க வலியவனாதலால் அவன் உன்னை எதிர்த்தான் என்பதும், கொன்றான் என்பதும் நம்பத்தக்க நிகழ்ச்சிகளாக இல்லையே என்றான் சம்பாதி. நின்றானே கொன்றானே: ஏகாரங்கள் வியப்பொடு வந்த வினாக்கள். கொள்கை: கோட்பாடு, சூழ்ச்சியும் ஆம். 37 | 4685. | என்று என்று ஏங்கி, இரங்கி, இன்னலால் பொன்றும் தன்மை புகுந்தபோது, அவற்கு ஒன்றும் சொற் கொடு உணர்ச்சி நல்கினான் - வன் திண் தோள் வரை அன்ன மாருதி. |
என்று என்று -(சம்பாதியானவன்) என்று பலவிதமாகக் கூறி;ஏங்கி இரங்கி -மனம் தளர்ந்த வருந்தி;இன்னலால் -துன்பத்தால்;பொன்றும் தன்மை புகுந்தபோது -இறக்கும் நிலையடைந்த போது;அவற்கு -அந்தச் சம்பாதிக்கு;வன்திண் வரை அன்ன தோள் மாருதி -மிக வலிய மலை போன்ற தோள்களையுடைய அனுமன்;ஒன்றும் சொல்கொடு -ஏற்ற சொற்களைக் கொண்டு;உணர்ச்சி நல்கினான் -தேறுதல் கூறினான். என்று என்று - அடுக்கு - துயரத்தால் வந்த எண்ணுப் பொருளது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி. ஒன்றும் சொல்: துயரத்தைத் தணிப்பதற்கேற்ற சொற்கள். அனுமன் சொல்லின் செல்வனாதலால் ஒன்றும் சொற்கொடு உணர்ச்சி நல்கினான் என்றார். 38 சம்பாதியின் வினாவும் அனுமனின் விடையும் | 4686. | தேற்றத் தேறி இருந்த செங்கணான், 'கூற்று ஒப்பான், கொலை வாள் அரக்கனோடு ஏற்று, போர் செய்தது என் நிமித்து?' என, காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்; |
தேற்றத் தேறி இருந்த செங்கணான் -(அனுமன்) தேறுதல் மொழி கூறியதனால் மனந் தெளிந்த சிவந்த கண்களையுடைய அந்தச் சம்பாதி;கூற்று ஒப்பான் -யமன் போன்று வலிமையுடைய சடாயு;கொலை வாள் அரக்கனோடு -கொலை புரியும் வாளையுடைய அரக்கனாகிய இராவணனோடு; ஏற்று -எதிர் நின்று;போர் செய்தது -போர் |