செய்ததற்கு;என் நிமித்து என -காரணம் என்ன என்று வினாவ;காற்றின் சேய் -வாயு குமாரனான அனுமன்;இது கட்டுரைக்கும் - பின்வரும் செய்திகளைக் கூறலானான். ஆல்: ஈற்றசை. சம்பாதி அனுமன் தேறுதல்மொழியால் மனந் தெளிந்து, சடாயு இராவணனோடு போர் செய்த காணத்தை வினாவ, அனுமன் கூறமுற்பட்டான். நிமிர்ந்து: நிமித்தம் (காரணம்). செங்கணான்: கண்கள் சிவந்தமை துயரத்தால் கலங்கியதாலாகும். 39 | 4687. | 'எம் கோமான், அவ் இராமன், இல் உளாள், செங்கோலன் மகள், சீதை செவ்வியாள், வெங் கோல் வஞ்சன் விளைத்த மாயையால், தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்; |
எம் கோமான் அவ்இராமன் -(அது கேட்ட அனுமன்) எங்கள் தலைவனாகிய அந்த இராமபிரானின்;இல் உளாள் -மனைவியாக இருப்பவளும்;செங்கோலன் மகள் -நீதி தவறாத ஆட்சியையுடைய சனகமன்னன் திருமகளும்;செவ்வியாள் -நல்லிலக்கணங்களும் பண்பும் நிறைந்தவளுமான;சீதை -சீதையானவள்;வெங்கோல் வஞ்சன் - கொடுங்கோலையுடைய வஞ்சகனான இராவணன்;விளைத்த மாயையால் - செய்த சூழ்ச்சியால்;தன் கோனை -தன் நாயகனான அந்த இராமபிரானை; பிரிவுற்ற தன்மையாள் -பிரிந்த தன்மையையுடைவளானாள். வெங்கோல் வஞ்சன் விளைத்த மாயை: மாயமான் காரணமாக இராம இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்தது. இல் உளான்: வீட்டிலிருந்து கணவனுக்கு வேண்டிய தொழிலைச் செய்பவள்; மனைவி - இடவாகுபெயர். 40 | 4688. | 'கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக் கண்டான் நும்பி; அறம் கடக்கலான், ''வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு'' எனா, திண் தேரான் எதிர் சென்று சீறினான். |
கொண்டு ஏகும் -சீதையைக் கவர்ந்து செல்லும்;கொலை வாள் அரக்கனை -கொலை செய்யும் வாளேந்திய இராவணனை;நும்பி கண்டான்-உன் தம்பி பார்த்தான்;அறம் கடக்கலான் -தருமநெறி |