பக்கம் எண் :

84கிட்கிந்தா காண்டம்

     இரவி சேயும் -சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கும்; இருவரும் -
இராமலக்குவரும்;அரிகள் ஏறும் -குரங்குகளுக்குச் சிங்கம் போன்றவனான
அனுமனும்;வெம் ஊகச் சேனைசூழ -கொடிய வானரச் சேனைகள் சூழ்ந்து
வர;அறம் தொடர்ந்து -தருமதேவதை பின் தொடர்ந்து வந்து;உவந்து
வாழ்த்த -
மகிழ்ந்து வாழ்த்தவும்;நாகமும் - சுரபுன்னை மரங்களும்;
நரந்தக்காவும்
- நரந்தம் என்னும் மரங்களின் சோலையும்;நளின
வாவிகளும் -
தாமரை பொய்கைகளும்;நண்ணி -பொருந்தி;போக
பூமியையும் ஏசும் -
இன்பத்தை அனுபவிக்கும் போக பூமியாகிய சுவர்க்க
லோகத்தையும் இகழ்கின்ற;புது மலர்ச் சோலை புக்கார் -அன்றலர்ந்த
மலர்கள் நிறைந்த சோலையை அடைந்தனர்.

     அழிந்து போவதாய் இருந்த தன்னை இராமசுக்கிரீவர் நட்புக் காக்க
இருப்பதால், தருமதேவதை அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்த்தியது. சுவர்க்க
லோகத்தில் பெறும் இன்பத்தினும் சிறந்த இன்பம் தரும் இடமாதலின் 'போக
பூமியையும் ஏசும் புதுமலர்ச்சோலை' என்றார்.  தன் மாளிகைக்கு அழைத்துச்
செல்வோன் ஆதலின் 'சுக்கிரீவனை முன்னவரும், விருந்தினர்களாகச்
செல்வதால் இராமலக்குவரை அடுத்தும், அன்பும் அடக்கமும் கொண்டு
இராமலக்குவர் பின் செல்லும் அனுமனை அவ்விருவர்க்குப் பின்னும், ஏனைய
வானரங்களை அனுமனுக்குப் பின்னும் செல்லுமாறு வைத்துள்ள வைப்பு முறை
நயம் பொருந்தியதாகும்.                                         30

3816.ஆரமும்அகிலும் துன்றி, அவிர்
     பளிக்கு அறை அளாவி,
நாரம் நின்றன போல் தோன்றி,
     நவ மணித் தடங்கள்நீடும்
பாரமும், மருங்கும், தெய்வத் தருவு,
     நீர்ப்பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல்
     துவன்றிய கம்மைத்து அன்றே.

     ஆரமும் அகிலும் துன்றி -(அச்சோலை) சந்தன மரங்களும் அகில்
மரங்களும் நெருங்கப் பெற்று;அவிர் பளிக்கு அறை அளாவி -விளக்கம்
மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று;நாரம் நின்றன போல் -அவை
தண்ணீர் நிறைந்து நின்றவை போல;தோன்றி -காணப்பட்டு (விளங்க);
நவமணித் தடங்கள் -
நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்;
நீடும் பாரமும் -
நீண்டகரைகளிலும்;மருங்கும் -பக்கங்களிலுமுள்ள;
தெய்வத்தருவு -
தெய்வத் தன்மையுடைய மரங்களில்;நீர்ப்பண்ணை
ஆடும்-
நீர் விளையாட்டைச் செய்யும்;சூர் அர மகளிர் -தெய்வ
மகளிர்தம்;ஊசல் துவன்றி -ஊஞ்சல்கள் நெருங்கிய;சும்மைத்து -
ஆரவாரத்தைஉடையது.

     சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி,
தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல்
விளையாடப் பெற்ற