பக்கம் எண் :

86கிட்கிந்தா காண்டம்

சென்றடைந்த இராமலக்குவரும்;கவியின் வேந்தனும் - வானரத்
தலைவனாகிய சுக்கிரீவனும;தூய பூ அணை - தூய்மையான மல ரணைமீது;
பொலிந்து தோன்றினார்-
சிறக்க வீற்றிருந்தவர்களாய்;ஆய
அன்பினோடு-
பொருந்தியுள்ள அன்போடு;அளவளாவுவார் -
பேசலாயினர்.

     சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அனை பிறவற்றினும் பொலிவு
மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார்.

     அளவளாவுதல்- நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன்
உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் ஒருங்கமர்ந்து அன்பொடு
உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது.                          33

3819.கனியும்,கந்தமும், காயும் தூயன
இனிய யாவையும் கொணர, யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின்
இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான்.

     கனியும் - பழங்களும்;கந்தமும் -கிழங்குகளும்;காயும்-காய்களும்;
தூயன இனிய யாவையும் -
தூய்மையாயும் இனிமையாயும் உள்ள
யாவற்றையும்;கொணர - (வானரர்கள்) கொண்டுவர;யாரினும் புனிதன் -
யாவரினும் தூய்மையானவன் ஆகிய இராமன்;மஞ்சனத் தொழில் புரிந்து-
நீராடுதலைச் செய்து;பின் இனிது இருந்து -பின்னர் இனிமையாக இருந்து;
நல் விருந்தும் ஆயினான் -
சுக்கிரீவற்கு நல்ல விருந்தாளியும் ஆனான்.
(விருந்துண்டான்).

     சுக்கிரீவன் தன் பரிவாரங்களைக் கொண்டு விருந்து அளிக்க, இராமன்
நீராடி விருந்துண்டான்.  கந்தம் - கிழங்கு - வடசொல். விருந்து- புதுமை -
விருந்தினர்களைக் குறித்ததால் உவம ஆகுபெயர்.  விருந்தும் - உம்மை
இறந்தது தழுவிய எச்ச உம்மை - நண்பன் ஆனதை உடன் தழுவியது.   34

'நீயும் மனைவியைப் பிரிந்துள்ளாயோ?'
என இராமன் சுக்கிரீவனை வினாவுதல்

3820.விருந்தும் ஆகி, அம்
     மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து,
     இறைவன், சிந்தியா,
'பொருந்து நன் மனைக்கு
     உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும்
     பின்?' என்றான்.

     அம்மெய்ம்மை அன்பினோடு இருந்து- அத்தகைய உண்மையான
அன்புடனே இருந்து;இறைவன் -இராமன்;விருந்தும் ஆகி -