இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும் உணர்த்தினான். எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான் என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது. வாலி சுக்கிரீவர்க்குத் தாய் ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் - உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன் விகாரமாகவாவது கொள்க. தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன் வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர் அமைத்துள்ள நயம் காண்க. 49 சுக்கிரீவனோடு வாலி பகைமை கொண்ட காரணம்கூறுதல் | 3835. | 'அன்னவன்எமக்கு அரசன் ஆகவே, இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள், முன்னவன் குலப் பகைஞன், - முட்டினான் - மின் எயிற்று வாள் அவுணன், வெம்மையான். |
அன்னவன் -அத்தகையோனாகிய வாலி;எமன் அரசன் ஆகவே- எங்களுக்கு அரசனாக இருக்க;இன்னவன் -இச்சுக்கிரீவன்;இளம்பதம் இயற்றும் நாள் -இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்;முன் அவன் குலப் பகைஞன் -முன்னமே வாலியின் குலப்பகைவனாய் உள்ளவனான;மின் எயிற்று வாள் அவுணன் -மின்னல் போன்று ஒளி வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்; வெம்மையான்- சினம் கொண்டவனாய் (வாலியை);முட்டினான் - எதிர்த்தான். மாயாவி: 'மயன் குமரன். துந்துபியின் சகோதரன். மந்தோதரி உடன் பிறந்தவன். இவனேவாலியை யுத்தத்திற்கு அழைத்தவனாயிருக்கலாம்' - அபிதானசிந்தாமணி. 50 | 3836. | 'முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர் ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்; ''வட்ட மண்டலத்து அரிது வாழ்வு'' எனா, எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான். |
|