பக்கம் எண் :

98கிட்கிந்தா காண்டம்

3838.'ஏகி, வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி, வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிட,
சோகம் எய்தினன், துணை துளங்கினான்.

     வாலியும் -வாலியும்;ஏகி - சென்று;இருது ஏழொடு ஏழ் -
பதினான்கு பருவகால வரையிலும்;வேகம் -வேகத்தோடு;வெம்பிலம்
தடவி-
கொடிய பிலத்தினுள்ளே தேடிப் பார்த்து;வெம்மையான் -
கொடுந்தன்மையுடைய அசுரனை;மோக வென்றி மேல் -(வெல்லுதலாகிய)
விரும்பத்தக்க வெற்றிமேல் கருத்துடையவனாய்;முயல்வின் வைகிட -
அம்முயற்சியின் ஈடுபட்டிருக்க;துணை - தம்பியான சுக்கிரீவன்;சோகம்
எய்தினன் -
துன்பம் அடைந்தவனாய்;துளங்கினான் -கலங்கினான்.

     பிலத்துள் சென்ற வாலி அசுரனைத் தேடுதலும், தேடிக்கொண்டு
பிடித்தலும், பிடித்துப் போர்செய்தலும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு
இருபத்தெட்டு மாதங்கள் வெளிவராததனால் 'வாலிக்கு என்ன இடுக்கண்
நேர்ந்ததோ' எனக் காவல் காத்து நின்ற சுக்கிரீவன் கலங்கினான்.  இருது -
இரண்டு மாத காலங்களைக் கொண்டது.  ஏழொடு ஏழ் - பதினான்கு
பருவங்கள் - இருபத்தெட்டு மாதகாலம்.  துணை - சுக்கிரீவன். இருபத்தெட்டு
மாதங்கள் கழிந்தமையால் வாலி இறந்திருப்பானோ என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு
ஏற்படலாயிற்று. வெற்றிமேல் கொண்ட மோகத்தால் 'மோகவென்றி' ஆயிற்று.
                                                           

53
3839.'அழுதுஅழுங்குறும்
     இவனை, அன்பினின்
தொழுது இரந்து, ''நின்
     தொழில் இது; ஆதலால்
எழுது வென்றியாய்! அரசு
     செய்க! '' என,
''பழுது இது'' என்றனன்,
     பரியும் நெஞ்சினான்.

     அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற;இவனை - இச்சுக்
கிரீவனை;அன்பினில் தொழுது இரந்து -(நாங்கள்) அன்போடு வணங்கி
வேண்டி;எழுது வென்றியாய் -நூல்களில் எழுதத்தக்க வெற்றியை
உடையவனே! நின்தொழில் இது ஆதலால் -இளவரசனாகிய நினக்குரிய
தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்;அரசு செய்க - அரசாட்சியை
ஏற்றுக்கொள்வாயாக;என - என்று சொல்ல;பரியும் நெஞ்சினான்-
(வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்;இது
பழுது-
இது குற்றமாகும்;என்றனன் - என்று உரைத்தான்.