பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்99

     இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி
மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய்,
இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை
கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர்.  பழுது இது என்றது -
வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது.  இதனால்
சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும்.

     எழுது வென்றியாய் - வெற்றித் தூண்களில் எழுதத்தக்க வென்றியை
உடையவனே எனவும் பொருள் கொள்ளலாம். 'பழுது இது' என்று சுக்கிரீவன்
கூறிய சுருக்கமான விடை 'சுருங்கச்சொல்லல்' எனும் அழகைச்சார்ந்தது.  54

3840.'என்று,தானும், ''அவ்
     வழி இரும் பிலம்
சென்று, முன்னவன் -
     தேடுவேன்; அவற்
கொன்றுளான்தனைக் கொல்வன்;
     அன்று எனின்,
பொன்றுவேன்'' எனா,
     புகுதல் மேயினான்,

     என்று - என்று சொல்லி;தானும் -சுக்கிரீவனும்;அவ்வழி -வாலி
சென்ற அவ்வழியே;இரும்பிலம் சென்று -அநதப் பெரிய பிலத்தினுள்
சென்று;முன்னவன் தேடுவேன் -வாலியாம் என் தமையனைத் தேடிப்
பார்ப்பேன்;அவற் கொன்றுளான் தனை -(அவன் இறந்து போயிருந்தால்)
அவனைக் கொன்றவனாகிய மாயாவியை;கொல்வன் -(போர்செய்து)
கொல்வேன்;அன்று எனின் -கொல்ல இயலவில்லை எனின்;
பொன்றுவேன்-(போரில்) இறப்பேன்;எனா -என்று கூறி;புகுதல்
மேயினான் -
அப்பிலத்தில் நுழையப் புகுந்தான்.

     முன்னவன் என்றது வாலியை.  வாலி சென்ற பிலத்தினுள் புகுந்து
வாலியைத் தேடுவது, அசுரன் வாலியைக் கொன்றிருப்பின் அவனைக்
கொல்வது, அது இயலாவிடின் மடிவது எனச் சுக்கிரீவன் தன் மனத்துணிவை
வெளிப்படுத்தினான்.  பிலத்தினுள் நுழைய மேயது வாலிமாட்டு அவன்
கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் காட்டியது.  அவற் கொன்றுளான் என
உயர்திணை ஈறு இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் விகாரம் உற்றது.
                                                          

55
3841.'தடுத்து, வல்லவர் தணிவு
     செய்து, நோய்
கெடுத்து, மேலையோர்
     கிளத்து நீதியால்
அடுத்த காவலும்,
     அரிகள் ஆணையால்