பக்கம் எண் :

கடல் தாவு படலம்11

 

மேக்குறவிசைத்தார் என்னப்
     பொலிந்தனர்-விஞ்சை வேந்தர்.

     தேக்கு உறுசிகரக் குன்றம்- தேக்கு மரங்கள் மிகுதியாகப் பெற்ற
மகேந்திர மலை; திரிந்து - தன் இயல்பு வேறுபட்டு; மெய்ந் நெரிந்து சிந்த -உடல் சிதைந்து சிதற (அதனால்); விஞ்சை வேந்தர் - வித்தியாதரத்
தலைவர்கள்; தூக்குறு தோலர் - உயர்த்திப் பற்றிய கேடகமுடையவராய்;
வாளர் - வாளை ஏந்தியவராய்; துரிதத்தின் எழுந்த தோற்றம் - வேகமாக
எழுந்த காட்சி; தாக்குறு செருவில் - மோதிச் செய்கின்ற போரில்;
நேர்ந்தார்தாள்அற வீச
- எதிர்த்த பகைவர்களின் முயற்சியற்றுப் போக
ஆயுதங்களைச்சுழற்ற; மேக்கு உறத் தாவி - வானிலே நன்றாகப் பாய்ந்து;
விசைத்தார்என்னப் பொலிந்தனர் - வேகம் பெற்றவர்களைப் போல
விளங்கினார்கள்.

     சலிப்பற்றதுமலை. அஃது இன்று சலித்தது. நிலை திரிந்தது. சுழன்றது;
அதனால் அங்குள்ள வித்தியாதரத் தலைவர்கள் ஏந்திய கேடகத்தோடும்
தாங்கிய வாளோடும் விண்ணில் சென்றனர். அக் காட்சி பகைவரைத் தாக்க
எழுந்தது போல் இருந்தது. பகைவரால் தாக்கப்பெற்று மேல் எழுந்த வீரர்
என்றும் பொருள் கொள்ளலாம்.                              (7)
 

4748. 
 

தாரகை,சுடர்கள், மேகம்
     என்று இவைதவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற
     படர்நெடும்பனிமாக் குன்றம்,
கூர் உகிர்க்குவவுத் தோளான்
     கூம்புஎனக்குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்துஆழும்
     கலம் எனல்ஆயிற்று அன்றே.

     தாரகை சுடர்கள்மேகம் என்று இவை- நட்சத்திரம், சூரிய
சந்திரர்கள்; மேகம் என்னும் இப்பொருள்கள்; தவிர - (சார்ந்து வராமல்)
நீங்கிநிற்க; தாழ்ந்து - இறங்கி; பாரிடை அழுந்துகின்ற - பூமியின்கண்
கீழ்நோக்கிப் போகும்; படர்நெடும் பனிமாக் குன்றம் - விரிந்து நீண்ட
குளி்ர்ந்த மலை; கூர்உகிர் குவவுத் தோளான் - கூர்மையான நகங்களையும்
திரண்ட தோள்களையும் உடைய அனுமன்; கூம்புஎன - பாய்மரம்
போலிருக்க; ஆர்கலி அழுவத்து - கடலின் ஆழத்திலே; குமிழி பொங்க
-நீர்க்குமிழிகள் கொந்தளிக்க;