4905. | அளக்கஅரிதுஆகிய கணக்கொடு அயல்நிற்கும் விளக்குஇனம்இருட்டினை விழுங்கி ஒளிகால உளக்கடிய காலன்மனம் உட்கும் மணிவாயில் இளக்கம்இல்கடற்படை இருக்கையை எதிர்ந்தான். |
அளக்க - அளந்துகாண்பதற்கு; அரிது ஆகிய - கடினமாக உள்ள; கணக்கொடு - கூட்டத்துடன்; அயல் நிற்கும் - பக்கத்தே நிற்கின்ற; விளக் குஇனம் - விளக்குக் கூட்டம்; இருட்டினை விழுங்கி - இருளை உட்கொண் டு;ஒளிகால - வெளிச்சத்தை வெளிப்படுத்த (அதனால்); கடிய உளக்காலன் -கடினமான உள்ளமுடைய யமனின்; மனம்உட்கும் - மனமும் பயப்படும்படியான; மணிவாயில் - மணிகள் பதிக்கப் பெற்ற கோபுரவாயிலின் கண் உள்ள; இளக்கம் இல் - தளர்ச்சியில்லாத; கடற்படை இருக்கையை - கடல்போன்ற படைகளின் இருப்பிடத்தை; எதிர்ந்தான் - எதிரே கண்டான். இரவினில் வந்துஉயிர்க்குலத்தினை அழிக்கும் காலன் ஒளி வாயிலைக் கண்டு அஞ்சினான் போலும் (பாரதி தந்த பிச்சை) சந்திரன் கீழ் வானில் இருப்பதால் நகரில் இருள் சூழ்ந்தது. அதனால் விளக்கு இருளை விழுங்கிற்று என்றார் கவிச்சக்கரவர்த்தி. (71) 4906. | எவ்அமரர், எவ் அவுணர், ஏவர் உளர் - என்னே !- கவ்வைமுதுவாயிலின் நெடுங்கடை கடப்பார் ? தெவ்வர் இவர்;சேமம்இது; சேவகனும் யாமும் வெவ்வமர்தொடங்கிடின் எனாய் விளையும் ? என்றான். |
கவ்வை - ஆரவாரம் மிக்க;முதுவாயிலின் - பழமையான கோபுரவாயிலின்; நெடுங்கடை - நீண்ட முற்றத்தை; கடப்பார் - கடந்து செல்ல வல்லவர்கள்; எ அமரர் - எந்தத் தேவர்குழுவில்; எ அவுணர் - எந்த அசுரர் குழுவில்; ஏவர் உளர் - எவர்கள் இருக்கின்றார்கள்; என்னே - என்ன அதிசயம்; தெவ்வர் இவர் - பகைவர்கள் இத்தகையவர்; சேமம் இது - பாதுகாப்பு இத்தகையது (என்றால்); சேவகனும் யாமும் - இராமபிரானும் யாங்களும்; வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் - கொடிய போரைத் தொடங்கினால் எதுவாக முடியுமோ; என்றான் - என்று (அனுமன்) சிந்தித்தான். |