பக்கம் எண் :

ஊர் தேடு படலம்117

வேகமாகக் கடந்துசென்று; இந் நகர் புக்கிடுவென் - இந்த நகருக்குள்
புகுவேன்; என்று - என்று கருதி; ஓர் அயல் போனான் - ஒரு பக்கத்தில்
சென்றான்.

என்று ஓர் அயல்போனான் - இதில் உள்ள ‘ஓர்’ அசை கோவலன்
கூறும் கட்டுரை என்பதை அடிகள் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை
என்றார். உரை வகுத்த நல்லார், ‘ஓர்’ இடைச்சொல் என்றார். ஆய்க. ஒரு
என்னும் சொல் பெயர் அன்று (ஒரு என்பது அசைச்சொல்லாகவே வழங்கப்
பெறுகிறது. நீ மனிதனா என்பதை நீ ஒரு மனிதனா என்பர்) (74)

இலங்காதேவிஅனுமனைத் தடுத்தல்

                                சந்தக்கலித்துறை

4909.

நாள்நாளும்தான் நல்கிய காவல் நனிமூதூர்
வாழ்நாள்அன்னாள் - போவதின் மேலே வழி
                               நின்றாள்;
தூண் ஆம்என்னும்தோள் உடையானை -
                                 சுடரோனைக்
காணா வந்தகட்செவி என்னக் கனல் கண்ணாள்.

(அவ்வமயத்தில்)

நாள் நாளும் -தினந்தோறும்; தான் - தன்னால்; காவல் நல்கிய -
பாதுகாப்பு வழங்கப்பெற்ற; நனி மூதூர் - மிகப் பழமையான இலங்கையின்;
வாழ்நாள் அன்னாள் - ஆயுட்காலம் போன்றவளும்; சுடரோனை -
ஒளிவீசுகின்ற சூரியனை; காணா வந்த - கண்டு விழுங்குவதற்கு வந்த; கட்
செவி என்ன -
பாம்பைப் போல; கனல் கண்ணாள் - நெருப்பைக்கக்கும்
கண்களையுடையவளும்; தூணாம் என்னும் - தூணே நிகராகும் என்று
கூறத்தக்க; தோள் உடையானை - தோள்களைப் பெற்ற அனுமன்;
போவதின் வழி மேலே - செல்லும் வழியின் கண்ணே; நின்றாள் (மறித்து)
-
நிற்பவளும்.

தோளுடையானை - ஐ- சாரியை இரண்டன் உருபு அன்று யாவும்
சூனியம், சத்து எதிர் - என்று கூற வேண்டியதை “யாவையும் சூனியம் சத்து
எதிர்” என்றார் மெய்கண்டார். பாடிய காரர் இரண்டன் உருபு விரியாமையைக்
கண்டு தெளிக. மலைப் பாம்புபோல் ஐ பாட்டிலுள்ளது. இரண்டன் உருபு
என்று கருதிப் பாடபேதம் செய்தவர்