பக்கம் எண் :

118சுந்தர காண்டம்

உளர். மா - மா -விளம் - மா - காய் என்னும் சீர்களை முறையே
பெற்றுவரும் இந்த யாப்பை வடநூலார் ‘மத்தமயூரம்’ என்பர், இத்தகைய
பாடல்கள் இந்நூலுள் 154 உள்ளன (மணிமலர் 76)                 (75)

4910.

எட்டுத்தோளாள், நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும்சோதி நிறத்தாள்; சுழல்
                                கண்ணாள்;
முட்டிப்போரில், மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும்காலன் வலத்தாள்; கமை இல்லாள்.

     எட்டுத் தோளாள்- எட்டுத்தோள்களையுடையவளும்; நாலு
முகத்தாள் -
நான்கு முகத்தையுடையவளும்; உலகு ஏழும் - ஏழு
உலகத்தையும்; தொட்டுப் பேரும் - தீண்டி, அதற்கு மேலும் செல்கின்ற;
சோதி - ஒளியைப் பெற்ற; நிறத்தாள் - மார்பை உடையவளும்; சுழல்
கண்ணாள் -
எல்லாப் பக்கத்திலும் சுழல்கின்ற கண்களையுடையவளும்;
முட்டிப் போரில் - முட்டி யுத்தத்தில்; மூ உலகத்தை - மூன்று
உலகங்களையும்; முதலோடும் கட்டி - உயிருடன் பிணித்து; சீறும் -
கோபிக்கின்ற; காலன் வலத்தாள் - யமனின் வன்மையுடையவளும்; கமை
இல்லாள் -
பொறுமையற்றவளும்.

     எட்டுத்தோள்முதலானவற்றைப் பெற்றவள் முட்டிப்போர் - முட்டியுத்தம்
- இப்போரில் எதிரியைப் பிளத்தல் கண்கூடு. அவள் வலிமை - காலன்
வலிமை. முதல் - ஆன்மா.                                 (76)

4911.

பாரா நின்றாள், எண்திசை தோறும்; பலர் அப்பால்
வாரா நின்றாரோ? என;மாரி மழையே போல்
ஆரா நின்றாள்;நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்;மின்னின் இமைக்கும் மிளிர்
                                    பூணாள்.

(அவள்)

     அப்பால் -நீண்ட தூரத்துக்கு அப்புறத்திலே; பலர் வாரா
நின்றாரோ-
பலர் வந்து கொண்டிருக்கிறார்களோ; என - என்று
ஐயங்கொண்டு; எண்திசை தோறும் - எட்டுத் திக்குகளிலும்; பாரா
நின்றாள் -
நோக்கியவண்ணம் இருப்பவளும்; மாரி மழையே போல் -
கார்கால மேகம் போல்;ஆரா நின்றாள் - முழங்கி நிற்பவளும்; அச்சம் தரு
-
பகைவர்களுக்குஅச்சத்தை விளைவிக்கும்; நூபுரம்