அஞ்சு வணத்தின்- ஐந்துநிறங்களைப் பெற்ற; ஆடை உடுத்தாள் -சேலையை அணிந்தவளும்; அரவு எல்லாம் அஞ்சும் - எல்லாப் பாம்புகளும்பயப்படும்படியான; உவணத்தின் - கருடனைப் போல; வேகம் மிகுத்தாள் -மிக்க வேகம் உடையவளும்; அருள் இல்லாள் - கருணையற்றவளும்; அம் - அழகிய; சுவணத்தின் உத்தரியத்தாள் - பொன் இழையால் அமையப்பெற்ற மேலாக்கையுடையவளும்; அம் - நீர் நிரம்பிய; சுவள் நத்தின் -அழகாக ஒளி பொருந்திய சங்கிற்பிறந்த; முத்து ஒளிர் - முத்து விளங்கும்;ஆரத்து அணி கொண்டாள் - ஆரங்களால் அழகு பெற்றவளும். சுவணத்தின் முத்து- சுவணதேய முத்து என்று வரத நஞ்சையப்பர் கூறுவார் - சுவர்ண தேயம், இலங்கை போலும். (79) 4914. | சிந்துஆரத்தின் செச்சை அணிந்தாள்;தெளிநூல் யாழ் அம்தா ரத்தின்நேர்வரு சொல்லாள்; அறைதும்பி கந்தா ரத்தின்இன்இசை பன்னிக் களிகூரும் மந்தா ரத்தின்மாலை அலம்பும் மகுடத்தாள். |
சிந்து ஆரத்தின்- கடலில்தோன்றிய முத்துக்களால் ஆன; செச்சை அணிந்தாள் - சட்டை தரித்தவளும்; நூல் தெளி - நூல்களால் சிறந்தது என்று முடிவு பண்ணிய; யாழ் - யாழின்கண் தோன்றிய; அம்தாரத்தின் - அழகிய ‘தாரம்’ என்னும் சுரத்தை; நேர் வரு சொல்லாள் - ஒத்திருக்கும் சொல்லையுடையவளும்; அறை தும்பி - தேனுண்டு இசைபாடும் வண்டுக்கூட்டங்கள்; இன் - இனிய; கந்தாரத்து இசை - காந்தாரம் என்னும் பண்ணை; பன்னி - (பண்ணி) பாடி; களிகூரும் - மகி்ழ்ச்சியடையும்; மந்தாரத்தின் - மந்தார மலர்களால் கட்டப்பெற்ற; மாலை அலம்பும் - மாலை அசைகின்ற; மகுடத்தாள் - கீரிடத்தை அணிந்தவளும். இன் இசை பண்ணி- இனிய இசையைப் பாடி மாலை மருதம் பண்ணி, காலை --‘செவ்வழி பண்ணி’ என்றும் (புறம் 149) ’யாழோர் மருதம் பண்ண’ என்றும் (மதுரைக் 658) பெருக வந்த வழக்கு அருகின. பன்னி - என்று மாற்றப் பெற்றது. ஒரு ஏடு (25) பண்ணி என்னும் பாடத்தை வழங்கிற்று, வாழ்க. இப்பாடலின்பின்னிரண்டு அடிகளோடு சீவகசிந்தாமணியுள் “மந்தார மாலை மலர் வேய்ந்து தீந்தேன், கந்தாரஞ் செய்து களிவண்டு |