நெஞ்சம் கண்டேகல் என நின்றே என்பதை அவ்வாறே வைத்துப் பொருள் செய்தல் ‘பாவம்’ என்னும் கவிதை நலத்துக்குத் துணையாகும். கண்டு + ஏ எனப்பிரித்து, ஏகல் எனக் கூட்டிப் பொருள் செய்தலும் ஒன்று. ஏகல் - உயர்ந்த மலை - ஏகல் வெற்பன் என்னும் தொடர் சங்க நூல்களில் காணலாம். ஏகல் வெற்பன் (குறுந் 265 நற்றிணை 116 அகம் 52) கண்டு + ஏ என்று பிரித்து ‘ஏ’ யை அசை ஆக்கினர். ஏற்பின் கொள்க. நினைவு - நினைவுடைச் சொற்கள் (கம்ப. 5255, சிந்தாமணி. 333) நினைவு - எண்ணம் என்று பொருள் கொண்டோர் பட்ட இடர்ப்பாடு பெரிது. ஏ - கல் எனப் பிரித்தல் வலிந்து செய்தலாகக் கருதுவார் ஏற்பன கொள்க. (86) 4921. | கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல் கொண்டாள்; ‘வெல்வாய், நீயேல், வேறி’என, தன் விழிதோறும் வல்வாய்தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில் ‘செல்வாய்’ என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்.* |
(இலங்கைத் தேவி) கொல்வாம் -நாம்இவளைக் கொல்வோம்; அன்றேல் - கொல்லப்படாமல் விட்டு விட்டால்; இ ஊர் - இந்த இலங்கை; கோள் உறும் - (இவனால்) அழிக்கப்படும்; எனல் கொண்டாள் - என்று மனத்தி்லே எண்ணி; வெல்வாயேல் - என்னை வெற்றி கொள்ள முடிந்தால்; நீ வேறி - நீ வெல்லுக; என - என்று கூறி; விழிதோறும் - கண்கள் தோறும்; வல்வாய்தோறும் - கொடிய வாய்கள் தோறும்; வெங்கனல் பொங்க - கொடிய நெருப்பு மூண்டு எரிய; மூ இலை வேலை - மூன்று தலைகளையுடைய சூலத்தை; மதி வானில் - சந்திரன் ஒளி வீசும் வானிலே; செல்வாய் என்னா - செல்லுவாயாக என்று கூறி; செலவிட்டாள் - அனுமன்மேல் வீசி எறிந்தாள். ‘சூலம்’ முத்தலைபெற்று, வேல்போல இருத்தலின் வேல் என்று கூறினான். (87) 4922. | தடித்துஆம்என்னத் தன்எதிர் செல்லும் தழல்வேலைக் கடித்தான்,நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் |
|