| ஒடித்தான்கையால் - உம்பர் உவப்ப, உயர்காலம் பிடித்தாள்நெஞ்சம் துண்ணென, - எண்ணம் பிழையாதான். |
எண்ணம்பிழையாதான் -நினைவாலும் தவறு செய்யாத அனுமன்; உம்பர் உவப்ப - தேவர்கள் மகிழும்படி; உயர்காலம் பிடித்தாள் - சிறந்த பாசத்தைப் பற்றிய இலங்கைத்தேவி; துண் என - திடுக்கிடும்படியாகவும்; தடித்து ஆம் என்ன - மின்னலே ஒப்பு என்று கூறும்படி; தன் எதிர் செல்லும் - தன் முன்னே வரும்; தழல்வேலை - நெருப்பைக் கக்கும் வேலாயுதத்தை; கடித்தான் - பற்களால் கடித்து; கையால் - கைகளால்; விண்ணில் - ஆகாயத்தின்கண்; நாகம் - பாம்புகளை; முரிக்கும் கலுழன்போல் - முறிக்கின்ற கருடனைப் போல; ஒடித்தான் - துண்டு துண்டாகச் சிதைத்தான். காலம் - பாசம்.“சூலம் எனில் அன்று. இது தொல்லை வரும் காலம்’ (கம்ப . 8378) அண் - கழகம்) காலம் பிடித்தாள் - அச்சூலத்தை நீண்ட காலம் பிடித்தவள் என்று கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க. காலம் பிடித்தாள் (என்பதை) - சூலம் பிடித்தான் என்று பாடபேதம் செய்தாரும் உளர். (88) 4923. | இற்றுச்சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள் மற்றும் தெய்வப்பல்படை கொண்டே மலைவாளை உற்றுக் கையால்ஆயுதம் எல்லாம் ஒழியாமல் பற்றிக்கொள்ளா விண்ணில் எறிந்தான், பழிஇல்லான்.* |
சூலம் - அனுமன் மேல் ஏவியசூலப்படை; இற்று - முறிந்து; (அதனால்) நீறு எழல் காணா - புழுதி கிளம்புவதைப் பார்த்து; எரி ஒப்பாள்- நெருப்பைப் போன்று சீறி; மற்றும் - பிறகும்; பல்தெய்வப் படைகொண்டு - பலவிதமான தெய்வீகப்படைகளைக் கொண்டு; மலைவாளைஉற்று - போர் செய்யும் இலங்கைத் தேவியை அணுகி; பழிஇல்லான் -பழியற்றவனாகிய அனுமன்; கையால் - தன்னுடைய கைகளால்; ஆயுதம்எல்லாம் - எல்லா ஆயுதங்களையும்; ஒழியாமல் - தப்பாமல்; பற்றிக் கொள்ளா -கவர்ந்துகொண்டு (அவள் மேல் வீசாமல்); விண்ணில்எறிந்தான் - ஆகாயத்தில் வீசி எறிந்தான். சூலம் பொடியாகிஅதனால் புழுதி எழுவதைக் கண்டு நெருப்புப் போற் சினங் கொண்டு இலங்கைத் தேவி வேறு படைகளைக் கொண்டு |