பக்கம் எண் :

ஊர் தேடு படலம்127

போரிட அனுமன் அவள்போர்க்கு வராதபடி ஆயுதங்களைப் பறித்து
விண்ணில் எறிந்தான்.

     நீறு - சூலம்முறித்த அதிர்ச்சியால் உண்டான புழுதி. சூலம் இற்றதே
அன்றிப் பொடியாகவில்லை.

     ‘பழி ஓர்வான்’என்று பாடம் கொண்டு பெண்ணைக் கொல்வதால்
உண்டாம் பழியை நினைத்துப் படைக்கலங்களை விண்ணில் எறித்து அவளைக்
கொல்லாது விட்டான் எனல் சிறப்புடைத்து.                        (89)

4924.

வழங்கும்தெய்வப் பல்படை காணாள்,
                             மலைவான்மேல்
முழங்கும் மேகம்என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும்குன்றுகொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும்செந்தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள்.

     தகவு இல்லாள் -நற்பண்புஅற்ற இலங்கைத் தேவி; வழங்கும் -
பகைவர் மேல் எறியும்; பல்தெய்வப் படை - பலவிதமான தெய்வீகப்
படைகள்; காணாள் - சிதறிய இடங்களை அறியாமல்; வான்மலைமேல் -
வானம் அளாவிய மலையின்மேல்; முழங்கும் - இடிக்கின்ற; மேகம் என்ன -
மேகத்தை ஒப்ப; முரற்றி - கர்ச்சித்து; முனிகின்றாள் - சீற்றங்கொண்டு;
குன்று -
மலைகளை; கழங்கும் பந்து கொடு - கழற்சிக் காய்களாகவும்
பந்துகளாகவும்  பாவித்துக்  கொண்டு;  ஆடும் - விளையாடுகின்ற; கரம்
ஓச்சி -
கைகளை உயரத் தூக்கி; தழங்கும் செந்தீ - முழங்குகின்ற தீயானது;
சிந்த -
சிதறும்படி; (அனுமனை) அடித்தாள் - தாக்கினாள்.

     அமைதியானமலையில் மேகம் இடிப்பதுபோல் அனுமனை இலங்கைத்
தேவி அடித்தாள். மலை, வான் - வான் மலை எனக் கூட்டுக. வானத்தில்
முழங்கும் மேகம் என்று சிலர் உரை கூறின் ஆய்க. மழைவான்மேல் என்று
பாடம் கொண்ட வரும் உளர்.                                  (90)

4925.

அடியாமுன்னம் அம்கை அனைத்தும் ஒருகையால்
பிடியா ‘என்னே?பெண்இவள்; கொல்லின்
                                பிழை’என்னா,
ஒடியா நெஞ்சத்துஓர்அடி கொண்டான், உயிரோடும்
இடியேறு உண்டமால்வரைபோல், மண்ணிடை
                               வீழ்ந்தாள்.