பக்கம் எண் :

ஊர் தேடு படலம்129

இலங்கைத் தேவி தன்வரலாறு கூறுதல்

அறுசீர் விருத்தம்

4927.

‘ஐய ! கேள்; வையம் நல்கும்
     அயன் அருள்அமைதியாக
எய்தி, இம்மூதூர் காப்பென்;
     இலங்கைமாதேவி என்பேர்;
செய்தொழில்இழுக்கி னாலே,
     திகைத்து,இந்தச் சிறுமை செய்தேன்
‘உய்தி’ என்றுஅளித்தி யாயின்,
     உணர்த்துவல் உண்மை’ என்றாள்.

     ஐய - ஒப்பற்றவனே;வையம் நல்கும் அயன் - உலகம் படைத்த
பிரம்ம தேவனின்; அருள் - திருவருளே; அமைதியாக - கட்டளையாக;
இம்மூதூர் எய்தி -
இந்த பழமையான இலங்கையடைந்து; காப்பென் -
பாதுகாத்து வந்தேன்; என்பேர் - என்னுடைய பெயர்; இலங்கைமாதேவி -
இலங்கைத் தேவி; செய்தொழில் - மேற்கொண்ட காவல் தொழிலில்;
இழுக்கினாலே -
தவறு நேர்ந்தபடியால்; திகைத்து - மனங்கலங்கி; இந்தச்
சிறுமை செய்தேன் -
இந்த அற்பச் செயலைச் செய்தேன்;
 உய்தி என்று -
(நீ) தப்பிப்போ; ! என்று; அளித்தியாயின் - அருள்செய்வாயேயானால்;
உண்மை உணர்த்துவல் -உண்மையைக் கூறுவேன்; என்றாள் - என்று
கூறினாள்.                                              (93)

4928.

எத்தனைகாலம் காப்பென்
     யான் இந்தமூதூர் ? என்று,
முத்தனை வினவினேற்கு,
    ‘முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக்,
     காய்ந்தஅன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம்,பின்னை
     சிதைவதுதிண்ணம்’ என்றான்.

     யான் - நான்; இந்தமூதூர் - இந்தப் பழமையான இலங்கையை;
எத்தனை காலம் காப்பென் -
எவ்வளவு காலம் பாதுகாப்பேன்; என்று -
என்று; முத்தனை வினவினேற்கு -