பக்கம் எண் :

ஊர் தேடு படலம்135

     கருங்கடல் கடந்ததாளான் - பெரிய கடலைக் கடந்ததிருவடியுடைய
அனுமன்; ஆத்துறு சாலை தோறும் - பசுக்கள் நெருங்கியுள்ள கொட்டில்கள்
தோறும்; ஆனையின் கூடம் தோறும் - யானைக் கொட்டாரங்கள் தோறும்;
மாத்துறு மாடந் தோறும் - பலவகை விலங்குகள் உள்ள மாடங்கள்தோறும்;
வாசியின் பந்தி தோறும் - குதிரைச் சாலைகள் தோறும்; கா - பாதுகாப்பு;
துறும் - நெருங்கியுள்ள; சோலை தோறும் - சோலைகள் தோறும்;
பூத்தொறும் வாவிச் செல்லும் - மலர்கள் தோறும் தாவிப் போகின்ற;
பொறிவரி வண்டின் - புள்ளிகளும் வரிகளுமுடைய வண்டினைப் போல்;
போனான் - சென்றான்.

     கடல்கடந்ததிருவடியுடைய அனுமன், பூக்கள் தோறும்  தாவிப் போகும்
வண்டைப் போல் - சாலைகள் தோறும், கூடந்தோறும். மாடந் தோறும், பந்தி
தோறும் சென்றான். ஆ - பசு. ஆன் - எருது என்றும் பொருள் கூறலாம்.
ஆன் அலாது ஊர்தியில்லை என்று திருமுறை பேசும். (நாவரசர் தானலாது)
ஆன்+ஐ- ஐ சாரியை. ஊர் உற்றது என்று கூற வேண்டியதைக் கவிச்
சக்கரவர்த்தி ‘ஊரை உற்றது’ என்பான் - (நகர் நீங்கு படலம் 230). மாத்து -
உயர்வு என்று கூறுவாரும் உளர். அனுமன் பிறர் அறியாவண்ணம் சென்றான்.
அதை விளக்கவே பூத்தொறும் தாவிச் செல்லும் வண்டு வந்தது. அவனுக்குக்
கூடமும் மாடமும் பூவாக இருந்தன. ‘காத்து உறு சோலை’ என்று பிரித்து,
பாதுகாத்துப் பயன் படுத்தும் சோலைகள் எனப் பொருள் உரைத்தல்
பொருந்துமேல் கொள்க.                                   (101)

4936.

பெரியநாள்ஒளிகொள் நானா
     வித மணிப்பித்திப்பத்தி,
சொரியும் மா நிழல் அங்கங்கே
     சுற்றலால்,காலின் தோன்றல்,
கரியன்ஆய்,வெளியன் ஆகிச்
     செய்யனாய்காட்டும் - காண்டற்கு
அரியன்ஆய்எளியன் ஆய்த் தன்
     அகத்து உறைஅழகனேபோல்.

     நாள் ஒளி கொள்- நட்சத்திரங்களின் ஒளியைப் பெற்ற; நானாவித -
பலவிதமான; பெரியமணி - பெரியமணிகள் (பதிக்கப்பெற்ற); பித்திப் பத்தி -
சுவரின் வரிசைகள்; சொரியும் - பொழிகின்ற; மா நிழல் - சிறந்தஒளியானது
அங்கங்கே; அனுமன் செல்லுகின்ற இடமெல்லாம் சுற்றலால் - அனுமனைச்
சூழ்ந்துள்ள