பக்கம் எண் :

136சுந்தர காண்டம்

காரணத்தால்; காலின் தோன்றல் - வாயுதேவனின் புதல்வனான அனுமன்;
காண்டற்கு அரியனாய் - கண்ணாற் காண்பதற்கு அரியவனாய்; எளியனாய்
-
அறிவால் காண்பதற்கு எளியவனாய்; தன் அகத்து - தன்னுடைய
மனத்திலே; உறை அழகனே போல் - தங்கியிருக்கும் இராமபிரானைப்
போல; கரியனாய் - கரிய நிற முடையவனாகவும் (திருமால்); வெளியனாய் -
வெண்ணிறமுடையவனாகவும் (பிரம்மதேவன்); செய்யனாய் -
செந்நிறமுடையவனாகவும் (சிவபிரான்); காட்டும் - (தன்னைப் பலவிதமாகக்)
காண்பித்துக் கொண்டான்.

     பலவிதமாகஒளியைப் பாய்ச்சும் சுவர்களின் சார்பால் அனுமன் தன்
உள்ளத்தில் உள்ள இராமபிரானைப் போலக் கரியவனாகவும் வெளியவனாகவும்
சிவந்தவனாகவும் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டான், அனுமன் நீலம்,
முத்து, மாணிக்க மணிகளின் ஒளியால் சுற்றப்படும் போது முறையே கரியன்,
வெளியன், செய்யன் ஆகிறான் என்க.                        (102)

                         அனுமன்அரக்கர்களைக் காணுதல்

4937.

ஈட்டுவார்,தவம்அலால் மற்று
     ஈட்டினால்,இயைவது இன்மை
காட்டினார்விதியார்; அஃது
    காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டுவார் முலைபொறாத
     பொய் இடைநையப் பூநீர்
ஆட்டுவார் அமரர்மாதர்;
     ஆடுவார்அரக்க மாதர்.+

     வார் பூட்டு -கச்சால் இறுக்கிக் கட்டப்பெற்ற; முலை பொறாத -
கொங்கைகளைச் சுமக்கவியலாத; பொய் இடை - நுட்பமான இடையானது;
நைய - வருத்தம் அடையும்படி; அமரர் மாதர் - ;தேவ மகளிர்; பூ நீர் -
சங்கமுகநதியில்; ஆட்டுவார் - நீராட்டுவார்கள்; அரக்க மாதர் - அரக்க
மகளிர்; ஆடுவார் - நீராடுவார்கள்; அஃது - அக்காட்சியால்; விதியார் -
நல்வினை என்பவர்; ஈட்டுவார் - தேடிச் சேர்க்க விரும்புவர்; தவம்
அ(ல்)லால் -
தவம் ஒன்றைத் தவிர; மற்று - (பொருள் முதலான) பிறவற்றை;
ஈட்டினால் - சேர்த்து வைத்தால்; இயைவது இன்மை - ஏற்றதாக (அறம்)
அமையாததை; காட்டினார் - கண்கூடாக்கினார். (இதை);