பக்கம் எண் :

138சுந்தர காண்டம்

பொருள் கூறுவர்.104முதல் 121 ஆம் பாடல் வரை ஒரு தொடர் இரண்டாம்
வேற்றுமை ‘ஐ’ கண்டார் என்பதை அவாவும்.                   (104)

4939.

‘இலக்கணமரபிற்கு ஏற்ற
     எழுவகைநரம்பின் நல்யாழ்
அலத்தகத்தளி்ர்க்கை நோவ,
     அளந்துஎடுத்து அமைத்த பாடல்
கலக்குறமுழங்கிற்று’ என்று
     கன்னியர்சேடி மார்கள்
மலர்க்கையால்,மாடத்து உம்பர்
     மழையின்வாய்பொத்து வாரை-

     இலக்கண மரபிற்குஏற்ற - நூல் முறைக்குப் பொருந்திய; எழுவகை
நரம்பின் -
ஏழுவகையான நரம்பைப் பெற்ற; நல்யாழ் - சிறந்த யாழில்;
அலத்தகம் - செம்பஞ்சு பூசப்பெற்ற; தளிர்க்கை நோவ - தளிர்போன்ற
கைகள் வருந்த; கன்னியர் - அரக்கப் பெண்கள்; அளந்து - தாளத்திற்கேற்ப
அளக்கப்பட்டு; எடுத்து அமைத்த பாடல் - எடுப்பாக அமைத்த பாசுரம்;
கலக்குற - கலக்கம் அமையும்படி; முழங்கிற்று என்று - இடிக்கின்றதென்று;
மழையின்வாய் - மேகத்தின் வாயை; மலர்க்கையால் - (தம்முடைய)
மலர்போன்ற கைகளால்; பொத்துவார் - மூடுகின்ற; சேடிமாரை -
(அரக்கியரின்) தோழியர்களையும்.

    யாழில் உருக்கள்சுரங்களுடன் பாடப்பெறும் சுரங்களுடன் பாடும்பா
பாசுரம் என்க. அளந்து எடுத்து அமைந்த பாடல் - இசைநூல் வல்லார்
ஆராய வேண்டிய பகுதி. இயற்றமிழ் ஒன்றே அறிந்தவர் உண்மை காண
ஒண்ணாதது அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. ‘அலத்தகப் பஞ்சு அடுத்த
பரிபுரப் பல்லவம்’ (கம்ப. 2385) என்னும் தொடரை நோக்குங்கால் அலத்தகம்
குழம்பை உணர்த்திடுமோ என்று தோன்றுகிறது. இது அரத்தகம் என்றும்
வழங்கப்படும். பொத்துவார் - முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது. (105)

4940.

சந்தப்பூம்பந்தர் வேய்ந்த
     தமனியஅரங்கில், தம்தம்
சிந்தித்ததுஉதவும் தெய்வ
     மணிவிளக்கு, ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும்திருத மாக்கள்
     விளம்பிதநெறிவழாமை