பக்கம் எண் :

14சுந்தர காண்டம்

 

கயிலையில் இருந்த தேவைத்
    தனித் தனிகடுத்தல் செய்தார்.

     வெயில்இயல்குன்றம் - ஒளியமைந்த மகேந்திர மலை; கீண்டு
வெடித்தலும் -
பிளவுபட்டு இரண்டாதலும்; மயில்இயல் தளிர்க்கை மாதர் -மயில் போன்ற சாயலும், தளிர் போன்ற கைகளும் கொண்ட தெய்வப்
பெண்கள்; நடுக்கம் எய்தி தழீஇக் கொள்ள - அச்சமுற்றுத் தழுவிக்கொள்ள
(அதனால்); பொலிந்த வானோர் - பூரித்த தேவர்கள்; அயில் எயிற்று
அரக்கன் -
கூரிய பற்களைப் பெற்ற இராவணன்; அள்ள - பெயர்த்தெடுக்க;
திரிந்த நாள் -
(கயிலாய மலை) அசைந்த காலத்தில்; அணங்குபுல்ல -
உமாதேவி தழுவிக்கொள்ள; கயிலையில் இருந்த தேவை - கயிலாய
மலையில்வீற்றிருந்த சிவபிரானை; தனித்தனி கடுத்தல் செய்தார் -
ஒவ்வொருவரும்தனித்தனியே ஒத்திருந்தார்கள்.

     தத்தம்தேவிமாரால் தழுவப்பெற்ற தேவர்கள் உமையம்மை தழுவக்
கயிலாய மலையில் மகிழ்ந்த சிவபிரானை ஒத்திருந்தனர். வெயில் - ஒளி -
வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட - (கம்பன் - மிகை 226)    
(11)

4752. 

ஊறியநறவும் உற்ற
     குற்றமும்உணர்வை உண்ண,
சீறிய மனத்தர்,தெய்வ
     மடந்தையர்ஊடல் தீர்வுற்று
ஆறினர்,அஞ்சுகின்றார்,
     அன்பரைத்தழுவி உம்பர்
ஏறினர், இட்டு,நீத்த
    பைங்கிளிக்கு இரங்குகின்றார்.

     ஊறிய நறவும் -(வியஞ்சனத்துடன்) ஊறிக்கிடந்த மதுவும்; உற்ற
குற்றமும் -
நேர்ந்த பிழையும்; உணர்வை உண்ண - அறிவை அழிக்க
(அதனாலே); சீறிய மனத்தர் - கொதிப்புற்ற மனத்தையுடைய; தெய்வ
மடந்தையர் -
தேவலோகப் பெண்கள் (மலையின் அதிர்ச்சியால்); ஊடல்
தீர்வுற்று ஆறினர் -
ஊடல் நீங்கி அமைதியடைந்தனர்; அஞ்சுகின்றார் -
அச்சம் அடைந்து; அன்பரைத் தழுவி - கணவரைத் தழுவிக்கொண்டு;
உம்பர் ஏறினர் -
விண்ணின் கண்ணே சென்று; இட்டு நீத்த - கூண்டுக்குள்