பக்கம் எண் :

140சுந்தர காண்டம்

துன்புறுத்திய; கொழுநர் தம்பால் - கணவர் மாட்டு; வரம்பு இன்றி -
எல்லையில்லாமல்; வளர்ந்த காமம் - பெருகிய காமமாகிய; பயிர்க்கு நீர்
போல் -
பயிரில் பாய்ச்சப்படும் தண்ணீரைப் போலவும்; அருத்திய - (தாம்)
விருப்பம் கொண்ட; அருநறவு - சிறந்த மதுவை; அருந்துவாரை -
உண்பவராகிய அரக்க மகளிரையும்.

     கருங்கயல் -பிரிவைக் காட்டுகிறது. வருத்துதல் - பரத்தையர்பால்
பிரிந்து வருத்துதல். அடிகள், கண்ணகி கருங்கயல், மாதவி செங்கண் என்றார்
(இந்திர - 237) கருங்கண் என்றது கண்ணகிக்குப் புணர்ச்சியின்மையால்
செங்கண் என்று உரைத்தது மாதவிக்குப் புணர்ச்சி விதும்பலால் என்று
அரும்பதவுரை பேசும். கயற்கண் அன்புப் பார்வையைக் காட்டும். வேல்வழி
சீற்றத்தைக் காட்டும். (கம்ப.983) இது விப்பிரலம்பம் (பிரிவு)        (107)

4942.

கோது அறுகுவளை நாட்டம்
     கொழுநர்கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியைவென்று
    துவர்த்தவாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர்தாமும்
     ஒருவர்பால்ஒருவர் வைத்த
காதல்அம்கள்உண் டார்போல்,
     முறைமுறைகளிக்கின் றாரை-

     கோது அறு -குற்றம்இல்லாத; குவளை நாட்டம் - (அரக்கியரின்)
குவளைப் பூப் போன்ற கரிய கண்கள்; கொழுநர் - தம் கணவரின்;
கண்வண்ணம் கொள்ள - கண்ணின் (சிவந்த) இயல்பைப் பெறவும்;
தூதுளங்கனியை - தூதுளம் பழத்தை; வென்று - (நிறத்தால்) வெற்றி
கொண்டு; துவர்த்த வாய் - செந்நிறம் பெற்றவாயில் வெண்மை தோன்ற -
வெண்மை நிறம் வெளிப்படவும்; (பூரண இன்பம் பெற்று) மாதரும் - அரக்கப்
பெண்களும்; மைந்தர்தாமும் - ஆடவர்களும்; ஒருவர் மேல் ஒருவர்
வைத்த -
ஒருவர் பால் ஒருவர் கொண்டுள்ள; காதல்அம் கள் - காதலாகிய
மதுவை; உண்டார்போல் - உண்டவர்போல்; முறைமுறை - மாறி மாறி;
களிக்கின்றாரை - செருக்குக் கொள்பவராகிய காதலர்களையும்.

     கரியகண்கள்சிவத்தலும், சிவந்த வாய் விளர்த்தலும் புணர்ச்சியால்
உண்டாகும். களி - உள்ளச் செருக்கு - (திருக்கோவை