பக்கம் எண் :

ஊர் தேடு படலம்141

52. பேராசிரியர்)இச்செருக்கு - உவகை மிகுதி தந்தது. இது சம்போகம்
(புணர்ச்சி)                                                (108)

4943.

விற்படர்பவளப் பாதத்து
     அலத்தகம்எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா
     வாசப்புனைநறுங் கலவை பூசி,
அற்புத வடிக்கண்வாளிக்கு
     அஞ்சனம்எழுதி, அந்தில்
கற்பகம்கொடுப்ப வாங்கி
    கலன்தெரிந்து அணிகின்றாரை-

     படர்வில் -பரவியஒளியைப் பெற்ற; பவளப் பாதத்து - பவளம்
போன்ற பாதங்களில்; அலத்தகம் எழுதி - செம்பஞ்சுக் குழம்பை
அலங்கரித்துப் பூசி; அளவு இல்லா - அளவு கடந்த; பொற்பு - பொலிவைப்
பெற்ற; வாசம் - மணமுடைய; புனை - கற்பூரம் முதலானவை சேர்க்கப்பெற்ற;
நறுங்கலவை - நல்ல கலவைச் சந்தனத்தை; மேனி பூசி - மேனியில்
அணிந்து (பிறகு); அற்புத - அதிசயமான; வடி - கூர்மையான; கண்
வாளிக்கு -
கண்களாகிய அம்புக்கு; அஞ்சனம் எழுதி - மையிட்டு; அம்
பொன் -
அழகிய பொன்மயமான; கற்பகம் - கற்பக மரம்; கலன்கொடுக்க -
ஆபரணங்களை வழங்க (அவற்றுள்); தெரிந்து - தமக்கு ஏற்றவற்றை அறிந்து;
வாங்கி - பெற்று; அணிகின்றாரை - அணிபவர்களாகிய அரக்கப்
பெண்டிரையும்.

     வாங்கி என்றான்மரத்திற்குக் கீழே தம் கையைத் தாழ்த்தாமல் எடுத்துக்
கொண்டமை நோக்கி.                                     (109)

4944.

புலிஅடு மதுகை மைந்தர்
     புதுப்பிழை உயிரைப் புக்கு,
நலிவிட அமுதவாயால்
     நச்சுஉயிர்த்து, அயிற்கண் நல்லார்,
மெலிவுடைமருங்குல் மின்னின்
     அலமர,சிலம்பு விம்மி
ஒலிபட உதைக்கும்தோறும்
     மயிர்ப்புளகு உறுகின் றாரை-