பக்கம் எண் :

ஊர் தேடு படலம்143

கணவரை - (தன்னைத் தேடும்)கணவரை; கனல்கின்றாரை - சீறுகின்ற
மகளிரையும். இப் பாடலைப்பின்பற்றி பரஞ்சோதியார் அமைத்த பாடல் -
திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் (75)
காண்க. புலவர் புராணம், பரஞ்சோதி... கம்பன் தனை நம்பிக்
கள்ளுண்டாட்டுரைத்தது என்று கூறும்.                           (111)

4946.

ஆலையில்,மலரில், சாரல்
    முழையினில், அமுதவாரிச்
சோலையில்,துவசர் இல்லில்
     சோனகர்மனையில், தூய
வேலையில் கொளஒணாத
     வேற்கணார்குமுதச் செவ்வாய்
வால் எயிற்று ஊறுதீம்தேன்
     மாந்தினர்மயங்கு வாரை-

     ஆலையில் மலரில்- கரும்பிலும் மலரிலும்; சாரல் முழையினில் -
மலைச்சாரலையடுத்த குகையிலும்; அமுதவாரிச் சோலையில் - நீர்ப்
பெருக்குடைய சோலையிலும்; துவசர் இல்லில் - துவசர்களின் வீட்டிலும்;
சோனகர் மனையில் - யனவர் மனையிலும்; தூய வேலையில் - தூய
பாற்கடலிலும்; கொள ஒணாத - பெற முடியாத; வேல் கண்ணார் - வேல்
போன்ற கண்ணைப் பெற்ற மகளிரின்; குமுதச் செவ்வாய் - குமுத மலர்
போன்ற வாயில்; ஊறும் வால் எயிற்று - வெள்ளிய பற்களுக்கிடையில்
ஊறுகின்ற; தீம் தேன் - இனிய தேனை; மாந்தினர் - நன்றாகக் குடித்து;
மயங்குவோரை - மயங்குபவர்களாய அரக்கரையும்.

     துவசர் -கள்விற்பவர்.                                   (112)

4947.

நலன்உறுகணவர் தம்மை
     நவைஉறப்பிரிந்து, விம்மும்
முலைஉறு கலவைதீய,
     முள்இலாமுளரிச் செங்கேழ்
மலர்மிசைமலர்பூத் தென்ன,
     மலர்க்கையால் வதனம் தாங்கி,