- கண்களையுடையவராய்;தூதியர் முறுவல் நோக்கி - தூதாகச் சென்ற பெண்களின் புன்னகையைப் பார்த்து; உயிர் வந்து - சென்ற உயிர் மீளவும் வரப் பெற்று; துடிக்கின்றாரை - துடிக்கின்றவர்களையும்; ஏதி - ஆயுதம்,அமளி - படுக்கை; சேக்கை - இடம். (114) 4949. | சங்கொடுசிலம்பும், நூலும் பாதசாலகமும் தாழ, பொங்குபல்முரசம் ஆர்ப்ப இல்உறைதெய்வம் போற்றி, கொங்குஅலர்கூந்தல், செவ்வாய், அரம்பையர், பாணி கொட்டி மங்கல கீதம்பாட மலர்ப்பலிவகுக்கின்றாரை- |
சங்கொடுசிலம்பும் - சங்கு வளையல்களும்காற்சிலம்பும்; நூலும் - அரை நூல் மாலையும் (மேகலை); பாத சாலகமும் - பாதத்தில் அணியும் கொலுசும்; தாழ - ஒலி குன்றும்படியாக; பொங்கு - மிக்கு ஒலிக்கின்ற; பல்முரசம் ஆர்ப்ப - பலவகை முரசங்கள் ஒலிக்கவும்; கொங்கு அலர் கூந்தல் - மணத்தைப் பரப்பும் கூந்தலையும்; செவ்வாய் - சிவந்த வாயையும் (உடைய); அரம்பையர் - தேவமாதர்கள்; பாணி கொட்டி - தாளத்தை ஒற்றி; மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்களைப் பாடவும்; இல்லுறை தெய்வம் போற்றி - வீட்டுத் தேவதைகளைப் புகழ்ந்து; மலர்ப்பலி - அருச்சனைப் பூக்களை; வகுக்கின்றாரை - தூவுகின்ற இல்லுறை மகளிர்களையும்; இல்லுறை தெய்வம்- வீட்டுத் தேவதை. இலக்கணையார் இலம்பகத்தில் இனியர் 17 ஆம் பாடலில் இல்லுறை தெய்வத்திற்குப் பூப்பலியைச் சிந்தினார் என்று வரைந்தார். ‘பூப்பலி செய்து’ (சிலம்பு - 28 - 231) பூப்பலி - அருச்சனை (குறிப்புரை) நூல் - அரைநூல்மரவை (மேகலை) (115) 4950. | இழைதொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க் குழைதொடர்நயனம் கூர்வேல் குமரர்நெஞ்சு உருவக் கோட்டி, |
|