பக்கம் எண் :

ஊர் தேடு படலம்147

புரிவதற்கு; உருத்தநெஞ்சர் - சீறிய மனத்தையுடையவராய்; மெள்ள -
மெதுவாக; இமையை நீக்கி - கண்ணிமைகளைத் திறந்து; அஞ்சனம் -
மையாகிய; இழுது வேய்ந்த - நெய் பூசப் பெற்ற; கள்ளவாள் - வஞ்சகமும்
கொடுமையும் பெற்ற; நெடுங்கண் என்னும் - பெரிய கண்கள் ஆகிய; வாள்
-
வாளாயுதத்தை; உறை கழிக்கின்றாரை - உறையிலிருந்து
கழித்தெடுப்பவரையும்.

    ஈங்கு பேசப்படும்மகளிர் ஊடலால் உறங்குவதுபோல் பாசாங்கு
புரிபவர்கள். அவர்களின் உள்ளக் காதலே ஊடலை நீக்கிற்று. கணவன்
காணாதபோது அவனைக் கண்டு அவன் நிலையை ஆராய்தலின் கள்ள
நெடுங்கண் என்றார். கலிங்கத்துப் பரணி இத்துயிலைப் பொய்த்துயில் என்று
பேசும். போர் என்றமையால் ‘உருத்த நெஞ்சர்’ என்றார். மை நெய்யாகவும்,
இமை உறையாகவும் கொள்க. இழையை நீக்கி என்பது பாடமாயின் அணிகள்
கலவிப் போர்க்கு இடையூறு நல்கிற்று என்று நீங்கியதாகக் கொள்க (கம்ப.
1017).                                                     (117)

4952.

ஓவியம்அனைய மாதர்
     ஊடினர்,உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம்மற்றும்
     கொழுநரோடுஒழிய, யாணர்த்
தூவியம் பேடைஎன்ன
     மின்இடைதுவள ஏகி,
ஆவியும் தாமுமேபுக்கு
     அருங்கதவு அடைக்கின்றாரை-

     உணர்வோடுஉள்ளம் - உணர்ச்சியும்ஊக்கமும்; மேவிய கரணம் -
ஒன்றியிருக்கும் அந்தக் கரணங்களும்; மற்றும் - பிற பொருள்களும்;
கொழுநரோடு ஒழிய - கணவர்பால் சென்று தங்க (தனித்திருந்து); ஊடினர் -
ஊடல் கொண்டு; யாணர் - அழகிய; தூவியம் பேடை என்ன -
இறகையுடைய பெண் அன்னம் போல; மின் இடை - மின்னல் போன்ற
இடையானது; துவள ஏகி - துவளும்படியாகப் புறம்பே போய்; ஆவியும்
தாமுமேயாய் -
பெருமூச்சும் தாமுமாக இருந்துகொண்டு; அருங்கதவு
அடைக்கின்றார் -
சிறந்த கதவை அடைக்கின்ற; ஓவியம் அனைய மாதர்
(ஐ) -
சித்திரம் போன்ற மாதரையும்.