கரணம்-மனம்,புத்தி சித்தம், அகங்காரம். உணர்வு-அறிவு உள்ளம்- ஊக்கம். தலைவிக்கு உதவியாக இருந்தது பெருமூச்சே., உள்ளம் மேவிய கரணம் என்பதை ஒரு தொடராக்கி அந்தக் கரணம் என்று உரை கூறுவர், சிலர். உள்ளம் - மனம் என்பர் சிலர். ஆவி-உயிர் என்று கூறப்பெற்றது. ஆவி-பெருமூச்சு. ‘உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே’ (கம்ப. 1092.) ஐ உருபு மாதருடன் கூட்டப் பெற்றது - அடைக்கின்ற மாதரை என அமைக்க. (118) 4953. | கின்னரமிதுனம் பாடக், கிளர்மழைகிழித்துத் தோன்றும் மின் எனத்தரளம் வேய்ந்த வெண்நிறவிமானம் ஊர்ந்து, பன்னக மகளிர்சுற்றிப் பலாண்டுஇசை பரவ, பண்ணைப் பொன்நகர்வீதிதோறும்; புதுமனைபுகுகின் றாரை- |
கிளர் - மேல்நோக்கி எழுகின்ற; மழை - மேகத்தை; கிழித்துத் தோன்றும் - பிளந்து கொண்டு வெளிப்படுகின்ற; மின் என - மின்னலைப் போல; தரளம் வேய்ந்த - முத்துக்களால் போர்ததப் பெற்ற; வெண்நிற - வெண்மையான நிறத்தைப் பெற்ற; விமானம் ஊர்ந்து - விமானத்தைச் செலுத்தி; (தமக்குரிய இடத்தைச் சார்ந்து) (அங்கே) கின்னர மிதுனம் பாட - கின்னரப் பறவைகள் பாடவும்; பன்னக மகளிர் - நாகலோகப் பெண்கள்; சுற்றி - சூழ இருந்து கொண்டு; இசை - பண்ணுடன்; பலாண்டு பரவ - பல்லாண்டுகளால் வாழ்த்தவும்; பண்ணை - நீர்நிலைகளைப் பெற்ற; பொன்நகர் வீதிதோறும் - புதிய நகரத்தில் அமைந்த வீதிதோறும்; புதுமனைபுகுகின்றாரை - புதிதாகக் கட்டப்பெற்ற வீடுகளில் புகுபவரையும்; ‘பொன்’ என்றசொல் புதுமையைக் காட்டும். பொன்ஏர் - என்பது முதலில் உழுதலைக் குறிப்பதை அறிக. பண்ணை - நீர்நிலை. தக்கை இராமாயணம் ‘இல்லறவீதியும் புதுமனையும் கட்டிக் குடியேறும் பலரைக் கண்டான்’ என்று பேசும் (சௌந்தரிய - ஊர் தேடு - 8) நகரும் புதிது வீடும் புதிது. கின்னர மிதுனம் - இசைபாடும் பறவை. கின்னரம் முரலும் அணங்குடைச்சாரல் (பெரும்பாண் 494) பெரியாழ்வார், கின்னரம் மிதுனங்களும் கின்னரம் தொடுகிலோம் என்றனர். (பெரியாழ்வார் திருமொழி 3 - 6) என்று பாடுகிறார். மணவாள மாமுனிகள், கொண்டு பாடித்திரிகையாலே கிந்நரமிதுனங்கள் என்று |