ஜகத்பிரஸித்தங்களாய் இருக்கின்றவர்கள் என்று விளக்கம் தந்தார். ஆழ்வாரின் திருவுள்ளம். கின்னரமிதுனம் தேவர்கள் என்று கருதுகின்றது. கம்பர் பாடுகின்ற கின்னர மிதுனங்கள் என்பார். ஏற்பன கொள்க.(119) 4954. | கோவையும்குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப, தேவர்நின்று ஆசிகூற, முனிவர்சோபனங்கள் செப்ப, பாவையர்குழாங்கள் சூழ, பாட்டொடுவான நாட்டுப் பூவையர் பலாண்டுகூற, புதுமணம்புகுகின்றாரை- |
கொண்டலின் -மேகத்தைப்போல; முரசம் ஆர்ப்ப - முரசங்கள் முழங்கவும்; நின்று - நின்றுகொண்டு; தேவர் ஆசிகூற - தேவர்கள் ஆசிகள் கூறவும்; முனிவர் - முனிவர்கள்; சோபனங்கள் செப்ப - மங்கல வாழ்த்துக்கள் பாடவும்; பாவையர் குழாங்கள் - பெண்கள் கூட்டங்கள்; பாட்டொடு - பாட்டுக்களோடு; சூழ - சுற்றியிருக்கவும்; வானநாட்டுப் பூவையர் - தேவலோகப் பெண்கள்; பலாண்டு கூறு - பல்லாண்டுகள் பாட; கோவையும் - முத்துக்களாலும் மணிகளாலும் அமைந்த மாலைகள்; குழைகள் மின்ன - மகரக் குழைகள் ஒளி வீசவும்; புதுமணம் புணர்கின்றாரை - புதுமணம் புரிகின்றவர்களையும். (120) அனுமன்கும்பகருணனைக் காணுதல் 4955. | இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர்,எஞ்சுஇல் விஞ்சை முயல்கறைஇல்லாத் திங்கள் முகத்தியர், முதலி னோரை- மயக்குஅற நாடிஏகும் மாருதி, மலையின் வைகும் கயக்கம்இல்துயிற்சிக் கும்ப கருணனைக் கண்ணின் கண்டான். |
இயக்கியர் -யட்சப்பெண்கள்; அரக்கிமார்கள் - அரக்கப் பெண்கள்;நாகியர் - நாகலோகப் பெண்கள்; எஞ்சு இல் - |