பக்கம் எண் :

கடல் தாவு படலம்15

அடைத்து விட்டு விட்டுவந்த; பைங்கிளிக்கு - இளமையான கிளியின்
பொருட்டாக; இரங்குகின்றார் - கவலைப்படுகிறார்கள்.

     கூட்டுக்குள்செறிக்காமல் இருந்தால் கிளி பறந்து சென்று பிழைக்குமே,
பறக்கவியலாதபடி அடைத்தோமே என்று வருந்தியதை இட்டு நீத்த என்னும்
தொடர் உணர்த்தும். மலையின் அசைவால் ஊடல் துன்பம் போயிற்று. இட்டு
நீத்த பைங்கிளியால் வந்த துன்பம் வளர்ந்தது. பிராட்டிகூடத் தான் விட்டுவந்த
கிளியைப் பாதுகாக்கும்படி தன் சகோதரிகட்குக் கூறும்படி சுமந்திரனிடம்
கூறினாள். ‘இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி’ என்னும் ஐங்குறுநூற்றுப்
பாடல் (375) மகளிர் கிளிகள்பால் கொண்ட பாசத்தைப் புலப்படுத்தும்.
பைங்கிளி - இளங்கிளி; பசுமை - இளமை. பசுங்கதிர்க் கொத்தொடு (தக்க
பரணி 605) என்னும் தொடருக்கு விளக்கம் கூறும்போது பசுங்கதிர் - பச்சைக்
கதிர். பசுமை நிறத்திற் சென்றதன்று. இளமையிற் சென்றது, என்று தெளிவித்தது
ஈண்டும் ஏற்கும். பாரதிகூட ‘பச்சைக் குழந்தை’ என்பார். ‘பச்சைப் பிள்ளை’
எனப் பேச்சு வழக்கிலும் இளங்குழந்தை குறிக்கப்படுவதை நினைவிற் கொள்க.
                                                         (12)

4753.

இத்திறம் நிகழும் வேலை,
     இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும்,
     முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்துஉறு மலரும், சாந்தும்
     சுண்ணமும் இனைய தூவி,
‘வித்தக சேறி’ என்றார்
     வீரனும் விரைவது ஆனான்.
 

     இத்திறம்நிகழும் வேலை - இப்படிப்பட்டநிகழ்ச்சிகள் நடைபெறுங்
காலத்தில்; இமையவர் முனிவர் மற்றை முத்திறத்து உலகத்தாரும் -
தேவர்களும், முனிவர்களும் இன்னும் மூவகையான உலகத்தில்
இருப்பவர்களும்; முறை முறை - தகுதிக்கேற்ற வரிசைப்படி; விரைவில்
மொய்த்தார் -
விரைவாக ஆகாயத்தில் ஒன்று கூடினர்; கொத்து உறுமலரும்- கொத்துக் கொத்தான பூக்களையும்; சாந்தும் - சந்தனத்தையும்; சுண்ணமும்- வாசனைப் பொடிகளையும்; இனைய - இப்படிப்பட்ட
பொருள்களையும்;தூவி - (அனுமன் திருமேனியில்) அள்ளி வீசி; வித்தக -
அறிஞனே!; சேறிஎன்றார் - ‘செல்க!’ என்று கூறினார்கள்;