குறைவற்ற; முயல்கறை- முயலாகிய களங்கம்; இல்லாத் திங்கள் - இல்லாத சந்திரனைப் போன்ற; முகத்தியர் - முகத்தையுடைய; விஞ்சை - வித்தியாதரப்பெண்கள்; முதலினோரை - முதலான பெண்களை; மயக்கு அற - சந்தேகம்இல்லாதபடி; நாடி ஏகும் மாருதி - ஆராய்ந்து செல்லும் ஆஞ்சநேயன்;மலையின் வைகும் - மலைபோல் உள்ளவனும்; கயக்கம் இல் துயிற்சி -இடையீடில்லாத உறக்கத்தை உடையவனும் ஆகிய; கும்பகருணனை -கும்பகர்ணனை; கண்ணின் கண்டான் - கண்களால் பார்த்தான். இயக்கியர்முதலானோரை நாடிச்செல்லும் மாருதி கும்பகர்ணனைப் பார்த்தான். முகத்தியர்,என்னும் குறிப்பு வினைமுற்று பெயரெச்சப்பொருளில் வந்தது. வினை எஞ்சு கிளவியும் வேறு பல்குறிய (தொல்-சொல் 457-சேனா) விஞ்சை என்பது ஆகுபெயராய் விஞ்சையரைக் குறித்தது. ‘வித்தைகள் வித்தை ஈசர்’ என்னும் சித்தியாரில் வித்தை என்பது மந்திரேசுரரைக் குறித்தமை காண்க (சித்தி. சுபக்கம் 1-25) கயக்கம் - இடையீடு. 104 முதல் 121 வரை ஒரு தொடர். (121) கலிவிருத்தம் 4956. | ஓசனைஏழ்அகன்று உயர்ந்தது; உம்பரின் வாசவன் மணிமுடிகவித்த மண்டபம் ஏசுற விளங்கியது;இருளை எண்வகை ஆசையின்நிலைகெட அலைக்கல் ஆன்றது. |
(கும்பன் அரண்மனை) ஏழ் ஓசனை -ஏழு யோசனை தூரம்; அகன்று உயர்ந்தது - விரிவு பெற்று அதற்கேற்ப உயர்ந்தது; உம்பரின் - விண்ணுலகத்தில்; வாசவன் - இந்திரன்; மணி முடி கவித்த மண்டபம் - அழகிய முடியைத் தரித்துக் கொண்ட மண்டபமானது; ஏசுற - பழியடையும்படி; விளங்கியது - (அதனினும் சிறப்பாக) ஒளி வீசுவது; எண்வகை ஆசையின் - எட்டுத் திக்கின் கண்ணும் உள்ள; இருள் - இருளானது நிலைகெட - நிலைகெட்டு அழிய; அலைக்கல் ஆன்றது - ஓடச்செய்தலால் (மன) நிறைவு பெறுவது. இந்திரன் மணிமுடிசூடும் மண்டபம் இந்திரனின் மணிமுடியைச் சூடிய மண்டபம் என்றும் இந்திரனின் மணி முடியைப் பறித்துக் கொண்டு வந்து கும்பகர்ணன் அதை |