பக்கம் எண் :

ஊர் தேடு படலம்151

அணிந்து கொண்டமண்டபம் என்றும் கூறலாம். ‘மன்னும் புரந்தரன்தன்
முடிபதித்த மணிமண்டபத்து’ என்று எம்பெருமான் கவிராயர் பாடுகின்றார்
(தக்கை ராமாயணம் சௌந்தரிய - ஊர்தேடு. 9) கலிவிருத்தம். ஊர் தேடு
படலத்தில் 43 ஆம் பாடலின் குறிப்பைக் காண்க.                  (122)

4957.

அன்னதன்நடுவண், ஓர் அமளி மீமிசை
பன்னக அரசுஎனப்பரவை தான்என,
துன்இருள்ஓருவழித் தொக்க தாம்என,
உன்னஅருந்தீவினை உருக்கொண் டென்னவே.

     அன்னதன் நடுவண்- அந்தமண்டபத்தின் நடுவில், ஓர் அமளி
மீமிசை -
ஒரு கட்டிலின் மேலே; பன்னக அரசு என - பாம்பரசனான
ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - பாம்பரசனான
ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என -  கடலைப் போலவும்; ஒரு
வழி - 
ஒரு பக்கத்தில்; தொக்கது - ஒன்று கூடிய; துன் இருள் என -
மிக்க இருள் போலவும்; உருக் கொள் -  வடிவம் பெற்ற; உன்ன அரும் -
சிந்திக்க அறியாத; தீவினை என்னவும் - பாபத்தைப் போலவும் (உள்ள
கும்பகருணன்).

     தொக்கது இருள் -ஒன்று கூடிய இருள் தொக்கது என்னும் முற்று
பெயரச்சப் பொருளில் வந்தது. (முகவை கவிராயர். நன் 351) இங்ஙனம்
மாற்றாக்கால் அரசு என, பரவை என - யாவும் பெயராக வருதலும் தொக்கது
என முற்று வினையாக வருதலும் சிறப்பின்மை ஓர்க. ஆம் - அசை
‘உடற்றவே கொல் ஆம் இப்படை எடுத்தது’ என்ற இடத்து ஆம்
அசையாயிற்று (கம்ப. 2308.)                                    (123)

4958.

முன்னிய கனைகடல் முழுகி, மூவகைத்
தன்இயல்கதியொடு தழுவி, தாது உகு
மன்நெடுங் கற்பகவனத்து வைகிய
இன்இளந்தென்றல்வந்து இழுகி ஏகவே.

(அரண்மனையில்)

     தாது உகு -   மகரந்தப் பொடிகள் சிந்துகின்ற; மன்நெடுங் கற்பக
வனத்து -
நிலைபெற்ற பெரிய கற்பகச் சோலையில்; வைகிய - தங்கியிருந்த;
இன் -
இனிமையான; இளந்தென்றல் - இளமையான தென்றற் காற்றானது;
முன்னிய -
கிளர்ந்துள்ள; கனைகடல் முழுகி - ஆரவாரிக்கும் கடலில்
நீராடி; தன் இயல் - தனக்குப் பொருத்தமான; மூவகைக் கதியொடும் தழுவி
-
மூன்று