பக்கம் எண் :

152சுந்தர காண்டம்

வகையான நடையைமேற்கொண்டு; வந்து - கும்பகர்ணனின் பக்கம் வந்து;
இழுகி ஏக - வருடிச் செல்லவும்.

     முன்னிய -கிளர்ந்தெழுந்த. நளிகடல் முன்னியது போலவும் (பரிபாட்டு
12-7) பணி செய்வோர் நீராடித் தூய்மையுடன் வந்து தொண்டு புரிவர்.
அதனையே தென்றல் மேற்கொண்டது. மூவகை இயல், மந்த நடை, மத்திய
நடை, துரித நடை (அடை பதி) குளிர்ச்சி, மந்தம், பரிமணம் ஆக கதி
மூன்றினையும் என்பது பழைய உரை. (அடை - பதி) காளிதாசரும் இம் மூன்று
பண்பையே போற்றுவார். கங்கை நீர் தோய்ந்ததால் குளிர்ச்சியும், தேவதாரு
மரங்களின் சார்பால் மணமும், மயில்தோகையை அலைத்ததால் மென்மையும்
பெற்ற காற்று வேடர்களின் நலிவைப் போக்கிற்று என்பர் (குமார 1-15) (124)

4959.

வானவர்மகளிர் கால்வருட, மாமதி
ஆனனம் கண்டமண்டபத்துள், ஆய்கதிர்க்
கால்நகு காந்தம்மீக்கான்ற காமர்நீர்த்
தூநிற நறுந்துளிமுகத்தில் தோற்றவே.

     வானவர் மகளிர்- தேவமகளிர்; கால் வருட - கால்களைப் பிடித்து
விடவும்; மாமதி - நிறைந்த பூரண சந்திரனானவன்; ஆனனம் கண்ட - தன்
முகத்தைப் பார்த்துக் கொள்ளும்; மண்டபத்துள் - மண்டபத்தின்கண்;
ஆய்கதிர் - மென்மையான ஒளி; நகு - விளக்கம் பெற்ற; காந்தக் கால் -
காந்தத்தால் அமைத்த தூண்; மீ கான்ற - மேலே வெளிப்படுத்திய; காமர் -
இனிமை யானதும்; தூ - தூய்மையானதும்; நிறம் - சிறப்பு மிக்கதும் (ஆன);
நறும் நீர்த்துளி - நறுமணம் மிக்க நீர்த்துளி; முகத்தில் - முகத்திலே; தூற்ற
-
மெல்ல வீசப் பெறவும்.

     சந்திரன் தன்முகஅழகைப் பார்க்கும் மண்டபம். சந்திரன் பார்வை
பட்டதால் காந்தத் தூண்கள் நறுந்துளி தூற்றின.                 (125)

4960. 

மூசியஉயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின்புறத்திடை நிறுவி, வன்மையால்
நாசியின்அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்;குதித்தனன், விதிர்த்த கையினான்.

     மூசிய - ஒன்றன் பின்ஒன்றாய் மொய்த்து வருகின்ற; உயிர்ப்பு எனும்
-
மூச்சுக்காற்று எனப்படும்; முடுகு வாதமும் - வேகமான காற்றும்; வாசலின்
புறத்திடை நிறுவி -
(அனுமனைக்