பக்கம் எண் :

154சுந்தர காண்டம்

4962.

பகைஎன, மதியினைப் பகுத்து, பாடுஉற
அகைஇல்பேழ்வாய் மடுத்து, அருந்துவான்எனப்,
புகையொடுமுழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய
நகைஇலா முழுமுகத்துஎயிறு நாறவே.

     பகைஎன - பகை என்று கருதி;மதியினை - பூரண சந்திரனை;
பகுத்து -
இரண்டு கூறு படுத்தி; அகைஇல் - வருத்தம் இல்லாத; பேழ்வாய்
-
பெரியவாயின்; பாடு - இரண்டு பக்கத்திலும்; உற மடுத்து - நன்றாக
உட்கொண்டு; அருந்துவான் என - உண்பவனைப் போல; புகையொடு -
புகையும்; முழங்குபேர் உயிர்ப்பு - முழங்குகின்ற பெருமூச்சு; பொங்கிய -
மிக்கிருக்கின்ற; நகை இலா - புன்னகையில்லாத; முழுமுகத்து -
பெரியமுகத்திலே; எயிறு நாற - பற்கள் தோன்றவும்.

     சந்திரனை இரண்டுகூறுபடுத்தி உண்பவனைப் போல இரண்டு
பக்கங்களிலும் வெண்மையான பற்கள் தோன்றவும். புகையும், உயிர்ப்பும்
உள்ள முகம் நாற - வெளிப்பட்டுத்தெரிய அகையில் - வருத்தம் இல்லாத.
உணவு இல்லாமையால் வருத்த மடையாத வாய். அகை - வருத்தம்.
அகையேல் அமர் கோழி (சிந்த 1524)                           (128)

4963. 

தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடைபுகல் அரியதுஓர் உறக்கம் எய்தினான்,
கடையுக முடிவு எனும்காலம் பார்த்து அயல்
புடைபெயராநெடுங் கடலும் போலவே.

     யுகம் முடிவு எனும்- யுகங்களின் முடிவு என்று கூறப்படும்; கடை
காலம் ஓர்ந்து -
பிரளய காலத்தை எதிர்பார்த்து; அயல் புடை பெயரா -
கரையைவிட்டுச் செல்லாத; நெடும் - பெரிய; கடல் போல - சமுத்திரத்தைப்
போலவும்; தடைபுகு மந்திரம் - தடையைச் செய்யும் மந்திரத்தால்; தகைந்த
-
கட்டுப்பட்ட; நாகம் போல் - நல்ல பாம்பைப் போலவும்; இடை -
இடையூறு; புகல் அரியது - புகவியலாத; உறக்கம் எய்தினான் - உறக்கத்தைஅடைந்தான்.                                 (129)

     அனுமன் கும்பகர்ணனைஇராவணனோ என ஐயுற்றுத் தெளிதல்

                    கலிநிலைத்துறை  

4964.

ஆவ தாகியதன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்றகுணமிலி இவன்எனக் கொண்டான்