| காவல்நாட்டங்கள் பொறியுகக் கனலெனக் கனன்றான் ஏவனோஇவன் ?மூவரின் ஒருவனாம் ஈட்டான் ! |
மூவரின் -மும்மூர்த்திகளில்; ஒருவன் ஆம் எனும் - ஒப்பற்ற சிவபிரான் ஒப்பாவான் என்று கூறப்படும்; ஈட்டான் - வலிமையுடைய அனுமன்; ஆவது ஆகிய தன்மைய - அப்படிப்பட்ட தன்மையுடைய; அரக்கனை - அரக்கனாய கும்பகருணனை; இவன் ஏவனோ - இவன் யாரோ (என ஐயுற்று); அரக்கர் கோ எனா - அரக்கர்களின் தலைவன் என்று; நின்ற - நிலைபெற்றுள்ள; குணம் இலி - பண்பற்றவன்; இவன் எனா - இவன் என்று; கொண்டான் - மனத்திலே எண்ணிக் கொண்டு; காவல் நாட்டங்கள் - உலகைப் பாதுகாக்கும் கண்கள்; பொறி உக - நெருப்புப் பொறி பறக்க; கனல் என - தீயைப் போன்று; கனன்றான் - சினங் கொண்டான். பிறர்,‘அரக்கனை இராவணன் என்று கருதியதாகவும், பிறகு மூவரில் (இராவணன், கும்பன், மேகநாதன்) யாவர் என்று எண்ணியதாகவும் கூறுவர். வை.மு.கோ. இவன் திரிமூர்த்திகளுள் யாராயினும் ஒருவன் என்று சொல்லத்தக்க பெருமை உடையவனான அனுமன் என்று இறுதியடிக்கு உரை வகுத்தார். (130) 4965. | குறுகி,நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும், குறித்த இறுகு திண்புயம்இருபதும், ‘இவற்குஇலை’ என்னா, மறுகி ஏறியமுனிவுஎனும் வடவைவெங் கனலை அறிவு எனும்பெரும் பரவை அம் புனலினால், அவித்தான். |
மற்று - பிறகு; குறுகிநோக்கி - (அரக்கனை) நெருங்கிப் பார்த்து; அவன் - அந்த இராவணனுக்கு அடையாளமான; ஒருபது தலையும் - பத்துத் தலைகளும்; குறித்த - கணக்கிட்ட; இறுகு - செறிவைப் பெற்றுள்ள; இருபது திண்புயமும் - இருபது தோள்களும்; இவற்கு இலை - இந்த அரக்கனுக்குக் கிடையாது; என்னா - என்று ஆராய்ந்து அறிந்து (அனுமன்); மறுகி - உள்ளம் கலங்கி; ஏறிய - மேலும் மேலும் பெருகி வருகின்ற; முனிவு எனும் - கோபம் என்கின்ற; வடவை வெங்கனலை - கொடிய வடவைத் தீயை; அறிவு எனும் - ஞானம் என்கின்ற; பெரும் - |