4967. | மாட கூடங்கள், மாளிகை ஓளிகை, மகளிர் ஆடு அரங்குகள்,அம்பலம், தேவர் ஆலயங்கள், பாடல் வேதிகை,பட்டி மண்டபம் முதல் பலவும் நாடி ஏகினன்இராகவன் புகழ்எனும் நலத்தான். |
இராகவன் புகழ்எனும் நலத்தான் - இராமபிரானின்கீர்த்தியின் வடிவமான அனுமன்; மாட கூடங்கள் - மாடகூடங்களையும்; மாளிகை ஒளிகை - மாளிகை வரிசைகளையும்; மகளிர் ஆடு அரங்குகள் - பெண்கள் விளையாடும் மேடைகளையும்; அம்பலம் - சபைகளையும்; தேவர் ஆலயங்கள் - கடவுளர் கோவில்களையும்; பாடல் வேதிகை - இசையரங்குகளையும்; பட்டி மண்டபம் - விவாத மேடைகளையும்; முதல் - இவை முதலான; பலவும் - பலவற்றையும்; நாடி - (பிராட்டியைத்) தேடி; ஏகினன் - சென்றான். இராமபிரானின்புகழின் வடிவமான அனுமன், மாடகூடங்கள் முதலானவற்றைத் தேடிச் சென்றான். இராமபிரானின்புகழையே எப்போதும் அனுமன் சிந்தித்தபடி இருத்தலின் அவனை இராமபிரானின் புகழாகவே கவிஞன் இசைத்தான். ஒளிகை - வரிசை. அம்பலம் - பலர்கூடு்ம் இடம். வேதிகை -மேடை. (133) 4968. | மணிகொள்வாயிலில், சாளரத் தலங்களில், மலரில் கணிகொள்நாளத்தில், கால்என, புகைஎனக் கலக்கும் நுணுகும், வீங்கும்; மற்றுஅவன்நிலை யாவரே நுவல்வார் ? அணுவில்,மேருவில் ஆழியான் எனச்செலும்; அனுமன் |
ஆழியான் என -சக்கரப்படை ஏந்திய திருமாலைப் போல; அணுவின்- சிறிய அணுவின் கண்ணும்; மேருவின் - பெரிய மேருமலையின் கண்ணும்;செலும் அனுமன் - ஊடுருவிச் செல்ல வல்ல அனுமன்; மணிகொள்வாயிலில் - மணிகள் பதிக்கப்பெற்ற வாசல்களிலும்; சாளரத் தலங்களில் -பலகணி இடங்களிலும்; மலரில் - பூவின் கண்ணும்; கணிகொள் நாளத்தி்ல் -நுட்பமான பூக்களின் தண்டின் கண்ணும்; கால்என - காற்றைப் போலவும்;புகை என் - புகையைப் போலவும்; கலக்கும் - ஒன்று படுவான்; |