பக்கம் எண் :

ஊர் தேடு படலம்159

4970.

பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல்அரிதுஎன  அவர்உரு மேவி,
ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

(அனுமன்)

    கருநிறத்தோர்பால் - கரிய நிறமுடையஅரக்கர்களின் நடுவில்;
வெளித்து -
வெண்ணிறங் கொண்டு (வெளிப்படையாக); வைகுதல் அரிது
என -
 வாழ்வது கடினம் என்று கருதி; அவர் உரு மேவி -
அவ்வரக்கர்களின் கரிய வடிவத்தை அடைந்து; பவளத்தின் கூடத்து -
பவளத்தாற் செய்யப்பட்ட கூடத்திலே; பசுந்தேன் துளிக்கும் - பசுமையான
தேன் சிதறுகின்ற; கற்பகப் பந்தரில் - கற்பகப் பந்தலின் அடியில்; பளிக்கு
வேதிகை -
பளிங்காலமைந்த மேடையில்; ஒளித்து - மறைத்து; வாழ்கின்ற -
வாழும்படியான; தருமம் அன்னான்தனை - தருமம் போன்ற வீடணனை;
உற்றான் -
அணுகிப் பார்த்தான்.

    அறத்தின் நிறம்வெண்மை என்பது இலக்கிய வழக்கு. இராமபிரானின்
பல்லின் வெண்மையைப் பேசவந்த அனுமன், ‘துறையறத்தின் வித்து முளைத்த
அங்குரல் கொல்’ என்று பேசினான் (கம்ப. 5280) “ ஆரருள சுரக்கும் நீதி
அறம் நிறம்கரிதோ” (கம்ப. 6492) எனப்பின் வருவதும் இங்கு கருதுக.  (135)

4971.

உற்றுநின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால்
                               உணர்ந்தான்
குற்றம்இல்லதோர் குணத்தினன் இவன்’ எனக்
                               கொண்டான்
செற்றம்நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான்
பொற்றைமாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான்.

     உற்றுநின்று -(வீடணனை)அணுகியிருந்து; அவன் உணர்வை -
அந்த வீடணனின் உணர்ச்சியை; தன் உணர்வினால் -  தன்னுடைய
ஆய்வுணர்வால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டு; இவன் - இங்கே
உறங்கும் இவன்; குற்றம் இல்லது - குற்றங்கள் இல்லாத; ஓர் குணத்தினன் -
ஒப்பற்ற குணமுடையவன்; எனக் கொண்டான் - என்று தெரிந்து கொண்டு
(அதனால்); செற்றம் நீங்கிய - பகைமை விலகிய; மனத்தினன் -
உள்ளத்தைஉடைய