பக்கம் எண் :

ஊர் தேடு படலம்163

4976.

இவனைஇன்துணை உடையபோர் இராவணன் என்னே
புவனம் மூன்றையும்வென்றது ஓர் பொருள்எனப்
                                      புகறல்?
சிவனை நான்முகத்தொருவனைத் திருநெடு மாலாம்
அவனை அல்லவர்நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?

     சிவனை -  சிவபெருமானும்;நான்முகத்து ஒருவனை - நான்கு முகம்
கொண்ட பிரம்மதேவனும்; திருநெடுமாலாம் அவனை - திருமால் என்று
புகழப்படும் அவனும்; அல்லவர் - அல்லாத தேவர்கள் (இவனை);
நிகர்ப்பவர் என்பதும் -
 ஒப்பாவார் என்று கூறுவதும்; அறிவோ -
அறிவாகுமா ? இவனை - இந்த வீரனை; இன் துணையுடைய - நல்ல
உதவியாளனாகப்பெற்ற; போர் இராவணன் - போர் விருப்பம்  பெற்ற
இராவணன்; புவனம் மூன்றையும் - மூன்று உலகங்களையும்; வென்றது -
வெற்றி கொண்டது; ஓர் பொருள் எனப்புகறல் -  ஒரு அருஞ்செயல் என்று
கூறுவது; என்னே - என்ன அதிசயம்.

    மும்மூர்த்திகட்குச் சமமான வீரனைத் துணையாகப் பெற்ற இராவணன்
மூன்று உலகத்தை வென்றது செயற்கரும் செயலன்று. சிவனை, ஒருவனை,
அவனை - என்பதில் உள்ள ‘ஐ’ வேற்றுமையன்று. அசை - நாடார் புகழாளை
- கூறி, என்ற (சிந் - 26 பதி) இடத்தில் புகழாள் - விசயை, ஐ - அசை என்று
இனியர் குறித்தார். பொருள் - செயல். ‘ஒரு பொருள் சொல்லுவதுடையேல்’
(கலி. 8) என்ற இடத்தில் இனியர் வரைந்ததைக் காண்க.             (142)

அனுமன் பிறஇடங்களில் தேடுதல்

4977

என்றுகைம்மறி்த்து ‘இடைநின்று காலத்தை இகப்பது
அன்று; போவதுஎன்று, ஆயிரம் ஆயிரத் தடங்காத்
துன்று மாளிகைஒளிகள் துரிசு அறத் துருவி
சென்று தேடினன்;இந்திர சித்தனைத் தீர்ந்தான்.

     என்று - என்று(இந்திரசித்தனைப் புகழ்ந்து) கூறி; கைமறித்து - இது
இப்படி இருக்கட்டும் என்று கையை அசைத்து; இடை நின்று காலத்தை -
தனக்கும் தேடத் தகும் பிராட்டிக்கும் நடுவில் நின்ற காலத்தை (புகழ்வதில்);
இகப்பது -
கடத்துவது; அன்று - தகாது; போவது - தேடிச் செல்வது
(நல்லது); என்று - என்று கருதி;