அனுமன் இடைநகர் அகழியைக் காண்டல் 4979. | இன்னர்ஆம்இரும் பெரும்படைத் தலைவர்கள் இருக்கைப் பொன்னின்மாளிகை ஆயிர கோடியும் புக்கான், கன்னிமாநகர்புறத்து அகன் கரந்துறை காண்பான் சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். |
இன்னர் ஆம்- இத்தன்மையராகிய; இரும்பெரும் படைத்தலைவர்கள்- மிகப்பெரிய சேனாதிபதிகளின்; இருக்கை - இருப்பிடங்களான; பொன்னின்- பொன்னாற் செய்யப்பெற்ற; ஆயிர கோடி மாளிகையும் - ஆயிர கோடிமாளிகைக்குள்ளே; புக்கான் - புகுந்து பார்த்து; கன்னி மாநகர்ப் புறத்து -அழியாத பெரிய நகருக்குள்ளே; அகன் கரந்து உறை - அகன்ற(இராவணனது) ஒளித்து வாழ்கின்ற இடத்தை; காண்பான் - காணும்பொருட்டாக; சொன்ன - கூறப்பெற்ற; மூன்றனுள் - மூன்று வகையானஅரண்களுக்குள்; நடுவணது அகழியை - இடையில் உள்ள அகழியை;தொடர்ந்தான் - சேர்ந்தான். கடலகழியும்,இவ்வகழியும், இனிப் பேசப்படும் அகழியும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. மூன்றாம் அகழி ‘தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி’ என்று பேசப்படும் (கம்ப. 5000) மதிலைக் கன்னி மதில் என்பர் கவிஞர். இத்தொடர்க்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்’, புதுமையழியாத திருமதில்’ என்று பெரிய திருமடலில் உரையிட்டார் (திவ்யமடல் 116) (145) 4980. | தனிக்கடக்களிறுஎன ஒரு துணையிலான் தாய, பனிக்கடல்பெருங் கடவுள்தன் பரிபவம் துடைப்பான் இனி கடப்ப அரிதுஏழ்கடல் கிடந்தது’ என்று இசைத்தான்- கனிக்கு அடல்கதிர்தொடர்ந்தவன், அகழியைக் கண்டான் |
ஒரு துணையிலான் -ஒரு துணையையும் வேண்டாத வீரன்; தனி - ஒப்பற்ற; கட - மதம்பிடித்த; களிறு என - யானை போல; தாய -கடக்கப் பெற்ற; பெரும் - பெரிய; பனி - குளிர்ந்த; கடல் கடவுள்தன் - கடலின் தெய்வத்தின்; பரிபவம் - அவமானத்தை; |