பக்கம் எண் :

18சுந்தர காண்டம்

     வீரன் - அனுமன்;வால்விசைத்து எடுத்து - வாலை வேகமாக
உயர்த்தி; வன்தாள் மடக்கி - வலிமையான திருவடிகளை மடக்கி; மார்பு
ஒடுக்கி -
மார்பைச் சுருக்கி; மானத் தோள்விசைத் துணைகள் பொங்க -
பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற இரண்டு புயங்கள் பூரிக்க;
கழுத்தினைச் சுருக்கி -
கழுத்தை ஒடுக்கி; தூண்டும் கால்விசைத் தடக்கை
நீட்டி -
தூண்டுகின்ற காற்றைப் போன்று வேகமாகக் கைகளை நீட்டி; உச்சி
விரிஞ்சன் நாடு உரிஞ்ச -
தலை பிரம்ம லோகத்தை உராயும்படி; கண்புலம்
கதுவா வண்ணம் -
கண்ணின் பார்வை பற்ற முடியாதபடி; மேல் விசைத்து
எழுந்தான் -
விண்ணில் வேகமாக எழும்பினான்.

     அனுமன் வால்எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, கழுத்தினைச்
சுருக்கி, கை நீட்டி உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச விசைத்து எழுந்தான். கடல்
கடக்க எழுந்த அனுமனின் மெய்ப்பாடு விளக்கப்படுகிறது. விசையம் என்னும்
சொல் அம் சாரியை குறைந்து வந்துள்ளது. வன்மை என்றும் வேகம் என்றும்
கூறலாம்.                                               (16)

4757.

ஆயவன்எழுதலோடும்
     அரும்பணைமரங்கள் யாவும்
வேய்உயர்குன்றும், வென்றி
     வேழமும்,பிறவும், எல்லாம்
‘நாயகன் பணிஇது’ என்னா,
     நளிர்கடல்இலங்கை தாமும்
பாய்வன என்ன,வானம்
     படர்ந்தன,பழுவம் மான.

     ஆயவன் - அந்த அனுமான்;எழுதலோடும் - மலையை விட்டு
எழுந்தவுடன்; அரும்பணை மரங்கள் தாமும் - சிறந்த கிளையைப் பெற்ற
மரங்களும்; வேய்உயர் குன்றும் - மூங்கில் வளர்ந்த மலைகளும்; வென்றி
வேழமும் -
வெற்றியையுடைய யானைகளும்; பிறவும் எல்லாம் -
கூறப்பெறாத எல்லாப் பொருள்களும்; நாயகன் பணி இது என்னா -
இராமபிரானுக்குச் செய்யும் தொண்டு இது என்று கருதி; நளிர்கடல் இலங்கை
-
குளிர்ந்த கடலால் சூழ்ந்த இலங்கை; தாமும் பாய்வன என்ன - தாங்களும்பாய்ந்து செல்வன என்று கூறும்படி; பழுவம் மான -
சோலைபோல; வானம்படர்ந்த - வானத்திற் பரவிச் சென்றன;

     
ஆயவன் - அத்தகையவன்(ஆய + அன்)                  (17)