பக்கம் எண் :

220சுந்தர காண்டம்

 

நின்று எண்ணிஉன்னுவான்
     அந்தோ !இந் நெடு நகரில்
பொன் துன்னும்மணிப் பூணாள்
     இலள்என்ன, பொருமுவான்.

     என்று எண்ணி -என்றுகருதி; இனி - இனிமேல்; ஈண்டு - இங்கே
(இருப்பதால்); ஓர் பயன் இல்லை - ஒரு பிரயோசனம் இல்லை; என -
என்று; நினையா - எண்ணி; குன்று அன்ன - மலை போன்ற;
தோளவன்தன் - தோளையுடைய இராவணனின்; கோமனை - அரண்மனை;
பிற்பட - பின்னே நிற்க; பெயர்ந்தான் - வெளியே சென்ற அனுமன்;
அந்தோ - ஐயோ; இ நெடுநகரில் - இந்தப் பெரிய நகரத்தில்; பொன்
துன்றும் -
பொன்னிலே பதித்த; மணிப்பூணாள் - மணிகளையுடைய
ஆபரணம் அணிந்த பிராட்டி; இலள்என்ன - இல்லை என்று; நின்று -
திகைத்து; எண்ணி - ஆலோசித்து; உன்னுவான் - நினைத்து; பொருமுவான்
-
குமுறுபவன் ஆனான்.

       எண்ணுதல்,ஆலோசித்தல், உன்னுதல், நினைத்தல்.       (225)

5060.

கொன்றானோ ? கற்பழியாக்
     குலமகளை ?கொடு்ந்தொழிலால்
தின்றானோ ?எப்புறத்தே
    செறித்தானோ சிறை ? சிறியேன்
ஒன்றானும்உணரகிலேன்;
     மீண்டுஇனிப்போய் என்னுரைக்கேன்
பொன்றாதபொழுது, எனக்கு இக்
    கொடுந்துயரம் போகாதால்.

(இராவணன்)

     கற்பு அழியா- கற்பு நிலையிலிருந்து பிறழாத; குலமகளை - தூய
பிராட்டியை; கொன்றானோ - கொன்றுவிட்டானோ; கொடுந்தொழிலால் -
(புலால் உண்ணும்) கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ;
எப்புறத்தே - எந்த உலகத்தில்; செறித்தானோ - சிறையில் அடைத்து
வைத்தானோ; சிறியேன் - அற்ப அறிவுடைய யான்; ஒன்றானும் - ஒரு
சிறிதும்; உணரகிலேன் - அறியாதவனாய் உள்ளேன்; இனி - இனிமேல்;
மீண்டும் போய் - திரும்பிச் சென்று (இராமபிரானுக்கு); என்