துப்பினால்செய்த - பவளத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால் பெற்ற - கைகளையும் கால்களையும் பெற்ற; துளி மஞ்சு ஒப்பினான்தனை - மழை பொழியும் மேகம் போன்ற இராமபிரானை; நினைதொறும் - நினைக்கும் போதெல்லாம்; நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட கண்கள் சிந்திய; அப்பினால் நனைந்து - கண்ணீரால் நனையப் பெற்று; அருந்துயர் உயிர்ப்புடை யாக்கை - போக்க முடியாத துன்பமும் பெருமூச்சும் பெற்ற உடம்பின்; வெப்பினால் உலர்ந்து - வெப்பத்தால் உலர்ந்து; ஒருநிலை உறாத - ஒருபடித்தாய் இராத; மென்துகிலாள் - மெல்லிய ஆடையுடையளாய்இராநின்றாள். பவளக்காலும்பவளக்கையும் பெற்ற மேகம், என்றது இல்பொருள் உவமையணி. (8) 5077. | ‘அரிது-போகவோ, விதி வலி கடத்தல் !’ என்று அஞ்சி, ‘பரிதிவானவன்குலத்தையும், பழியையும், பாரா, சுருதி நாயகன்,வரும் வரும்’ என்பது ஓர் துணிவால் கருதி, மாதிரம்அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள். |
போகவோ -சிறையிலிருந்து தப்பிச் செல்லுதலோ; விதிவலி கடத்தல் ஓ - விதியின் வலிமையைக்கடந்து போதலோ; அரிது - முடியாததாகும்; என்று அஞ்சி - என்று கருதி அச்சமுற்று; சுருதி நாயகன் - வேதத்தின் தலைவனான இராமபிரான்; பரிதி வானவன் குலத்தையும் - தன்னுடைய சூரிய வம்சத்தையும்; பழியையும் - தனக்கு நேர்ந்த அவமானத்தையும்; பாரா - பார்த்து; வரும் வரும் - (உறுதியாக) வருவான் வருவான்; என்பது ஓர் துணிவால் - என்று (அடிமனம்) கூறும் உறுதிப்பாட்டால்; கருதி - இராமபிரானது வருகையை எதிர்பார்த்து; மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; அளக்கின்ற கண்ணாள் - துழாவிப் பார்க்கும் கண்களையுடையாள். போதல் என்னும்தொழிற் பெயர் போக என்னும் வடிவம் பெற்றது. வரல் இயலாது - வர இயலாது என வந்தாற்போல, போகவோ என்பதில் உள்ள ஓகாரத்தைக் கடத்தல் என்பதுடன் கூட்டவேண்டும். ‘அரிது போகவோ’ என்னும் பாடம் சிறப்புடைத்து. போகவோ,
|