5080. | ‘கண்டிலன்கொலாம் இளவலும் ? கனை கடல் நடுவண் உண்டு இலங்கைஎன்று உணர்ந்திலர் ? உலகு எலாம் ஒறுப்பான் கொண்டு இறந்தமைஅறிந்திலராம் ?’ எனக் குழையா, புண் திறந்ததில்எரி நுழைந்தாலெனப் புகைவாள். |
இளவலும் -இளையபெருமாளும்; கண்டிலன் கொல் ஆம் - (மான் பின் போன இராமபிரானை) காணவில்லை போலும்; உலகு எலாம் ஒறுப் பான்- எல்லா உலகங்களையும் வருத்தும் இராவணன்; கொண்டு இறந்தமை -அபகரித்துக் கொண்டு கடல் கடந்து வந்ததை; அறிந்திலர் ஆம் -அறியவில்லை போலும்; (அறிந்தாலும்) இலங்கை - இலங்கை மாநகர்;கனைகடல் நடுவண் உண்டு - ஆரவாரிக்கும் கடலின் நடுவில் உள்ளது;என்று உணர்ந்திலர் ? - என்று அறியவில்லையோ; என - என்றுநினைத்து; குழையா - மனம் வருந்தி; எரி - நெருப்பானது; புண் திறந்து -புண்ணைத் திறந்து; அதில் நுழைந்தால் என - அதற்குள் புகுந்தாற் போல;புகைவாள் - மனம் வருத்தம் அடைவாள். கண்டிலன் கொல்ஆம் என்பதில் உள்ள ‘கொல் ஆம்’ என்னும் ஐய உணர்வுச் சொற்களை உணர்ந்திலர் என்பதனுடன் சேர்க்க. ‘கொல்’ ஐயப் பொருளையும் ‘ஆம்’ போலும் என்னும் பொருளையும் தரும் ‘காணலனே கொலாம்’ (கம்ப. 2751) ஆம் என்பதை அசையாக்குவாரும் உண்டு (அண் - பல்-கலை-பதி) (12) 5081. | ‘மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன் மன்; மற்றோர், யாண்டை என்நிலை அறிவுறுப்பார்கள் ? இப் பிறப்பில் காண்டலோ அரிது’என்று, என்று, விம்முறும்; கலங்கும்; மீண்டு மீண்டுபுக்கு எரி நுழைந்தாலென, மெலிவாள். |
எருவைகட்கு அரசன்- கழுகுகளின் தலைவனான சடாயு; மாண்டு போயினன் - இறந்து விண்ணுலகை அடைந்தான்; மற்றோர் - வேறுபிறர்; யாண்டை - எங்கே; என் நிலை அறிவுறுப்பார்கள் - |