பக்கம் எண் :

காட்சிப் படலம்237

என்னுடைய தற்போதையநிலையைச் (இராமலக்குவர்க்குச்) சொல்வார்கள்;
இப்பிறப்பில் - (ஆதலால்) இந்தப் பிறப்பிலே (இராமலக்குவர்களை);
காண்டலோ அரிது - காண்பது அருமையானதாகும்; என்று என்று - என்று
பலபடியாக எண்ணி; விம்முறும் - துன்புறுவாள்; கலங்கும் - சஞ்சலம்
அடைவாள்; மீண்டு மீண்டு - திரும்பத் திரும்ப; எரி புக்கு - நெருப்பு
புகுந்து; நுழைந்தால் என - நுழைந்தாற் போல; மெலிவாள் -
தளர்ச்சியடைவாள்.

     கழுகுகட்கு அரசன்இறந்து போயினனோ என்று பிராட்டி ஐயுறுவதாக
உரை கூறுவாரும் உளர். சடாயு இறந்து விட்டான் என்று கருதிப் பிராட்டி
“வன்துனை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்” என்று கூறிப்
புலம்புகிறாள் (கம்ப. 3447) ஆதலின் அவ்வுரை பொருந்தாது. எருவைகள் -
கழுகுகள். நெருப்புச் சுட்ட இடத்திலேயே மீண்டும் நெருப்புப் புகுந்து சுட்டாற்
போலப் பிராட்டி வருந்தினாள் என்க.                             (13)

5082.

‘என்னை, நாயகன், இளவலை, எண்ணலா
                                வினையேன்
சொன்னவார்த்தை கேட்டு, “அறிவு இலள்” எனத்
                                துறந்தானோ ?
முன்னை ஊழ்வினைமுடிந்ததோ ?’ என்று, என்று,
                                முறையால்
பன்னி, வாய்புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர்
                                பதைப்பாள்.

     இளவலை - இளைய பெருமாளை;எண்ணலா வினையேன் -
மதியாததீவினையைச் செய்த யான்; சொன்ன வார்த்தை - கூறிய
கொடுஞ்சொற்களை;கேட்டு - கேள்விப்பட்டு; நாயகன் - இராமபிரான்;
என்னை அறிவு இலள்எனத் துறந்தானோ ? - (அன்புக்குரிய) என்னை
அறிவற்றவள் என்று கருதிஒதுக்கித் தள்ளி விட்டானோ; (அல்லது) முன்னை
ஊழ்வினை -
பழையதீவினையானது; (என்னைத் துன்புறுத்துவதென்று)
முடிந்ததோ - தீர்மானித்துவிட்டதோ; என்று என்று - என்று என்று
(பலபடியாக); முறையால் -வரிசைப்படி; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய்
புலர்ந்து -
நா வறண்டு;உணர்வு தேய்ந்து - உணர்ச்சி தளர்ந்து; ஆர்
உயிர் பதைப்பாள் -
அரியஉயிர் துடித்து வருந்துவாள்.