பக்கம் எண் :

காட்சிப் படலம்311

     ஏழாய் ! -அறிவற்றவனே ! நின்கண் - நின்னிடத்தில்; இப் பெரும்
செல்வம் -
இந்தப் பெரிய செல்வத்தை;  ஈந்த - வழங்கி; பேரீசன் -
மகாதேவனான சிவபெருமான்; யாண்டும் மாதவத்தின் நின்று -
எப்பொழுதும் பெரிய தவத்தில் நிலைத்திருந்து; அப்பெரும் செல்வம் -
அந்தப் பெரிய செல்வத்தை; துய்ப்பான் அன்றே - அனுபவித்துக்
கொண்டுள்ளான் அல்லவா (அங்ஙனம் இருக்க); ஒப்பரும் திருவும் - ஒப்பற்ற
செல்வமும்; நீங்கி - உன்னை விட்டு விலகி; உறவொடும் - சுற்றத்தோடும்;
உலக்க உன்னி - அழிய நினைந்து; அறத்தைத் தப்புதி - அறத்திலிருந்து
தவறுகிறாய்; தருமத்தைக் காமியாயோ - அறத்தை விரும்பமாட்டாயா?

    சிவபெருமான் தவத்திலிருப்பது வெளிப்படை. அவன் துய்க்கும் செல்வம்
நிலைபேறானது சிவமாயிருத்தல். தப்புதல் - தவறுதல். இறைவன் உனக்குச்
செல்வத்தை வழங்கியது நீ தவத்திலிருந்து உயர்வடையவல்லவா, என்று உரை
கூறினர் பலர். ஈசன் செல்வம் ஈந்தது (நீ) யாண்டும் மாதவத்தின் நின்று அப்
பெரும் செல்வம் துய்ப்பான் அன்றே - எனக் கூட்டிப் பொருள் கொள்வர்.
                                                     (131)

5200.

‘மறம் திறம்பாத தோலா வலியினர்எனினும்,
                                 மாண்டார்,
அறம்திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும்
                                 அன்றே ?
பிறந்து இறந்துஉழலும் பாசப் பிணக்குடைப்
                           பிணியின் தீர்ந்தார்,
துறந்து அரும்பகைகள் மூன்றும் துடைத்தவர்,
                      பிறர் யார் ? சொல்லாய் !

     மறம் திறம்பாத- வீரத்திலிருந்து விலகிச் செல்லாத; தோலா -
தோல்வியடையாத; வலியினர் எனினும் - வல்லமையுடையவர் என்றாலும்;
மாண்டார் - அழிந்து போனவர்கள்; அறம் திறம்பினரும் - தருமத்திலிருந்
துவிலகினவரும்; மக்கள் - மக்களிடம் காட்ட வேண்டிய;
அருள் திறம்பினரும்- கருணையிலிருந்து விலகின வரும்; அன்றே -
அல்லவா ? துறந்து -ஆசைகளை விலக்கி; அரும்பகைகள் மூன்றும் -
கொடியமுப்பகைகளையும்; துடைத்தவர் - அழித்தவர்களே; பிறந்து
இறந்து -
உலகிலே பிறந்தும் இறந்தும்; உழலும் - சுழன்று கொண்டிருக்கும்;
பாசப்பிணக்கு உடை - பாசக்கட்டுடன் கூடிய; பிணியின் தீர்ந்தார் -
நோயிலிருந்து