பக்கம் எண் :

காட்சிப் படலம்315

     கடிக்கும் -(காரணமின்றி) கடிக்கும் இயல்பைப் பெற்ற; வல் அரவும் -
கொடும் பாம்பு கூட; மந்திரம் கேட்கும் - மந்திரத்துக்கு அடங்கும்;
களிக்கின்றோயை - செருக்குக் கொண்ட உன்னை; ஈது அடுக்கும் - இது
செய்யத் தக்கது; (ஈது) அடாது - இது செய்யத்தகாதது; என்று - என்று கூறி
(அதை மெய்ப்பிக்க); ஆன்ற - பழமையான; ஏதுவொடு - காரணத்துடன்
கூடிய; அறிவு காட்டி - அறிவைக் காண்பித்து; இடிக்குநர் - நெருக்கி
வற்புறுத்துபவர்கள்; இல்லை - இங்கே இல்லை; உள்ளார் - (உன் அவையில்)
இருப்பவர்கள்; எண்ணியது எண்ணி - நீ கருதியதையே மதித்து; உன்னை
முடிக்குநர் -
உன்னை அழிப்பவர்களே; என்ற போது - என்று அமைந்த
காலத்தில்; முடிவு அன்றி - அழிவு அல்லாமல்; முடிவது உண்டோ -
(வேறுவிதமாக) நிறைவேறுவது உள்ளதா ?

     “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்”
என்னும் குறள் (448) இப்பாடலுக்கு மூலம். இடிப்பார் - கழறுதற் குரியார்
(அழகர்) அடிச்சுப் புத்தி சொல்கிற பெரியோர் (பரிதி) ‘இராவணன் பாம்பினும்
கொடியவன்’ என்பது குறிப்பெச்சம். தலைவன் கருதியதையே மதிப்பவர்
அமைச்சராய் இருந்து பயனில்லை. வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று
உரைத்தல் வேண்டும்.                                      (130)

இராவணன் சீற்றம்

 கலித் துறை

5205.

என்று அறத்துறை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பனஒத்தன; வெயில் விடு பகு வாய்
குன்று இறத்தெழித்து உரப்பின; குறிப்பது என் ?
                                     காமத்
தின்திறத்தையும் கடந்தது, சீற்றத்தின் தகைமை.

     என்று - என்று பிராட்டிகூறிய; அறத்துறை - அறநெறியை;
கேட்டலும் - (இராவணன்) கேட்டவுடனே; இருபது நயனம் - (அவனுடைய)
இருபது கண்களும்; மின் திறப்பன ஒத்தன - மின்னல் (மேகத்தை)
பிளப்பதை ஒத்திருந்தன; வெயில்விடு பகுவாய் - வெப்பத்தை
வெளிப்படுத்தும் பிளந்தவாய்; குன்று இற - மலைகள் இற்றுப் போகும்படி;
தெழித்து உரப்பின - முழக்கி அதட்டின; குறிப்பது என் - எப்படிக்
குறிப்பிடுவது; சீற்றத்தின் தகைமை - அவனுடைய கோபத்தின் பண்பு;
காமத்தின் திறத்தையும் - அவன்பால் முன்பிருந்த காமத்தின் ஆற்றலையும்;
கடந்தது - விஞ்சியிருந்தது.