| | சொன்ன நீசன்,கை தொடுவதன்முன், துகைத்து உழக்கி, பின்னை, நின்றதுசெய்குவென்’ என்பது பிடித்தான். |
அன்ன காலையில்- அந்தச்சமயத்தில்; அனுமனும் - அனுமனானவன்; அருந்ததி கற்பின் - அருந்ததி போன்ற கற்புடைய; என்னை ஆளுடை - என்னை அடிமையாகக் கொண்ட; நாயகன் தேவியை - இராமபிரானின் பத்தினியை; என்முன் - எனக்கு எதிரில்; சொன்ன நீசன் கை - இழித்துப் பேசிய இராவணன் கை; தொடுவதன் முன் - பிராட்டியைத் தொடுவதற்கு முன்பு; துகைத்து - காலாலே மிதித்து; உழக்கி - கையாலே பிசைந்து (கொன்றபின்); பின்னை - மறுபடி; நின்றது செய்குவென் - நிலைத்த நற்பணியைச் செய்வேன்; என்பது - என்னும் எண்ணத்தை; பிடித்தான் - உறுதியாகப் பற்றிக் கொண்டான். என்னை ஆளுடைநாயகன் - இராமபிரான். கவிக்கு நாயகர் இருவரும் (அனுமன், கம்பன்) இங்ஙனம் பேசுவர். (கம்ப. 204.) அனுமன், ‘நின்றது செய்குவென்’ என்றான். அது அடுத்த பாடல் பேசும். அனுமனும் - உம். அசை. ‘காமக்கடல் மன்னும் உண்டே’ (குறள் 464, உரை) (139) | 5208. | ‘தனியன்நின்றனன்; தலை பத்தும் கடிது உகத் தாக்கி, பனியின்வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி, புனித மா தவத்துஅணங்கினைச் சுமந்தனென் போவென், இனிதின்’ என்பதுநினைந்து, தன் கரம் பிசைந்திருந்தான். |
தனியன் -தனித்துள்ள யான்; நின்றனன் - எழுந்து நின்ற இராவணனின்; தலைபத்தும் - பத்துத் தலைகளும்; கடிது உகத் தாக்கி - வேகமாகச் சிதறும்படி மோதி; இலங்கையை - இலங்கை மாநகரை; பனி வேலையில் - குளிர்ந்த கடலின்கண்; கீழ் உற - அடிப்பகுதியை அடைய; பாய்ச்சி - அமிழ்த்துவிட்டு (பிறகு); புனிதம் - தூய்மையான; மாதவத்து அணங்கினை - பெருந்தவம் செய்யும் பிராட்டியை; சுமந்தனென் - சுமந்து கொண்டு; இனிதின் போவென் - மகிழ்ச்சியுடன் (இராவணன்பால்) செல்வேன்;என்பது |