பக்கம் எண் :

318சுந்தர காண்டம்

நினைந்து - என்பதைக் கருதி;தன் கரம் பிசைந்து - தன்னுடைய
கரங்களைப் பிசைந்தபடி; இருந்தான் - சந்தர்ப்பம் நோக்கியிருந்தான்;

    தனியன் என்பதைஇராவணனுக்கு ஆக்கின் அஃது அனுமனுக்கு
இழுக்கு. இராவணன் தனியே உள்ளான்; கொல்லல் எளிது என்று வீரனான
அனுமன் கருதான்.                                      (140)

சீற்றம் தணிந்தஇராவணன் பேச்சு.

5209.

ஆண்டு, அவ்வாள் அரக்கன் அகத்து, அண்டத்தை
                                  அழிப்பான்
மூண்ட கால வெந்தீ என முற்றிய சீற்றம்,
நீண்ட காம நீர்நீத்தத்தின் வீவுறு நிலையின்
மீண்டு நின்று,ஒரு தன்மையால் இவை இவை
                                 விளம்பும்;

     ஆண்டு - அப்பொழுது; அ,வாள் அரக்கன் - கொடிய இராவணன்;
அகத்து - உள்ளத்தில்; அண்டத்தை அழிப்பான் - அண்டங்களை
அழிக்கும் பொருட்டு; மூண்ட - பற்றி எரிகின்ற; வெம்காலத் தீயென -
கொடிய காலாக்கினியைப் போல; முற்றிய  சீற்றம் - முதிர்ந்த கோபமானது;
நீண்ட - மிகுதியான; காமநீர் நீத்தத்தின் - காமமாகிய வெள்ளத்தில்;
வீவுறுநிலையின் - அழிந்து போக (அதனால்); மீண்டு - (பிராட்டியைக்)
கொல்லவேண்டும் என்னும் நினைவிலிருந்து திரும்பி; நின்று - தாமதித்து;
ஒருதன்மையால் - ஒப்பற்ற காமத்தால்; இவை இவை விளம்பும் -
இவற்றைப்பேசலானான்.

     தீயைக்காமப்புனல் அவித்தது. “நீர் வந்தால் காம நெருப்பழியும்
காணுமே” என்று ஒரு தனிப்பாடல் பேசும். (நீர் சிலேடை) நீத்தம் - வெள்ளம்.
                                                    (141)

அறுசீர்விருத்தம்

5210.

‘கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக்
கொல்கிலென்; குறித்துச் சொன்ன
சொல் உள;அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச்
                                 சொல்லின்,