| | “ஒல்வது ஈது; ஒல்லாதுஈது” என்று, எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ ? வெல்வதும்தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த, மேல்நாள். |
உன்னைக்கொல்வென் - உன்னைக் கொன்றுவிடுவேன்; என்று உடன்றேன் - என்று சீற்றம் கொண்டேன்; கொல்கிலேன் - கொல்லமாட்டேன்; குறித்துச் சொன்ன - நீ என் மேல் கூறிய; அவற்றுக்கு எல்லாம் - அந்தக் குற்றங்கட்கு; காரணம் தெரியச் சொல்லின் - காரணத்தை விளங்கக் கூறக் கருதின்; சொல் உள - (அதற்கேற்ற) சொற்கள் உள்ளன; ஈது ஒல்வது - இச் செயல் என்னால் நிறைவேற்றக் கூடியது; ஒல்லாது ஈது - இச் செயல் என்னால் நிறைவேற்ற முடியாதது; என்று ஒன்று - என்று வரையறுத்துக் கூறும் ஒரு செயல்கள்; எனக்கும் - பேராற்றல் படைத்த எனக்கும்; உலகத்து உண்டோ - உலகில் உள்ளதா ? மேல்நாள் - முற்காலத்தில்; வெல்வதும் - (பகைவர்) வெற்றி பெறுவதும்; தோற்றல் தானும்- தோல்வியடைந்ததும்; விளையாட்டின் விளைந்த - விளையாட்டைப் போல நிகழ்ந்தன. தோற்றது,கார்த்த வீரியன் பால் ‘நான் விளையாட்டாகத் தோற்றேன், உண்மையில் தோற்கவில்லை’. என்பது இராவணனின் போலிவார்த்தை. (142) | 5211. | ‘ஒன்றுகேள், உரைக்க; “நிற்கு ஓர் உயிர் என உரியோன் தன்னைக் கொன்று கோள்இழைத்தால், நீ நின் உயிர் விடின், கூற்றம் கூடும்; என்தன் ஆர்உயிரும் நீங்கும்” என்பதை இயைய எண்ணி, அன்று நான்வஞ்சம் செய்தது; ஆர், எனக்கு அமரில் நேர்வார் ? |
ஒன்று - ஒரு வார்த்தையை;உரைக்க கேள் - யான் கூற நீ கேட்பாயாக; நிற்கு - உனக்கு; ஓர் உயிர் என - ஒப்பற்ற உயிர் போல; உரியோன் தன்னை - உனக்கு உரிமையான இராமனை; கொன்று - கொன்ற பின்; கோள் இழைத்தால் - உன்னைக் கொண்டு வருதலைச் செய்தால்; (அதனால்) நீ நின் உயிர்விடின் - நீ உன் உயிரை விட்டு விட்டால்; கூற்றம் கூடும் - யமன் வருவான் |