(அதனால்); என்தன்ஆருயிரும் - என்னுடைய அரிய உயிரும்; நீங்கும் - என்னைவிட்டு நீங்கும்; என்பதை - என்னும் உண்மையை; இயைய எண்ணி - பொருந்த ஆராய்ந்து (அதனால்); நான் அன்று - நான் அன்றைய தினம்; வஞ்சம் செய்தது - வஞ்சகம் செய்தது; அமரில் - போரில்; எனக்கு நேர்வார் யார் ? - எனக்குச் சமமானவர் எவர். இராவணன், தன்வஞ்சகச் செயலுக்குக் கூறும் சமாதானம் ‘மாயையால் மறைந்து வந்தாய்’ என்ற பிராட்டியின் சொல்லுக்கு மாற்றம் (பதில்) கோள் இழைத்தல் - கவர்ந்து வருதல். கொள்ளுதல் என்னும் தொழிற் பெயர் கோள் என நின்றது. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர். ‘குற்றம் கூடும்’ - என்னும் பாடமும் உள்ளது. (143) | 5212. | ‘மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார், மீண்டு, யான் என்பதுஅறிந்தால் வாரார்; ஏழைமை, எண்ணி நோக்கல்; தேன் என்பதுஅறிந்து சொல்லாய் ! தேவர்தாம் யாவரே, எம் கோன் என்பதுஅறிந்த பின்னை, திறம்புவார், குறையின் அல்லால் ? |
தேன் என்பது -தேன்என்று சிறப்பித்துப் பேசும் பொருளும்; அறிந்த- (இன்பம்) அனுபவிக்கும்படியான; சொல்லாய் ! - சொற்களைப் பேசுபவளே;மான் என்பது அறிந்து போன - மான் என்பதை அறிந்து அதன்பின்சென்ற; மானிடர் ஆவார் - மனிதராக இருக்கின்றவர்கள்; மீண்டு - திரும்பிவந்து; யான் என்பது அறிந்தால் - (உன்னைக் கவர்ந்து சென்றது) யான்என்று அறிந்தால்); வாரார் - இலங்கைக்கு வரமாட்டார்கள்; எண்ணி நோக்கல் - (அவர்கள்) வருவார் என்று நினைந்து எதிர்பார்த்தல்; ஏழைமை - அறியாமையாகும்; தேவர்தாம் - எந்தத் தேவர்களாக இருந்தாலும்; எம் கோன் என்பது அறிந்த பின்னை - இச் செயல் செய்தவன் எம்தலைவனான இராவணன் என்று அறிந்த பிறகு; குறையின் அல்லால் - மனம் தளர்வாரேயல்லாமல்; யாவர் திறம்புவார் - எவர் முறை தவறி நடப்பார். தேனும்அனுபவிக்கும் இனிய மொழி. இங்ஙனம் கூறுவது கவிச் சக்கரவர்த்தியின் இயல்பு. “யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன |