இவையாம் என்னக்கேட்கும் மென் மழலைச் சொல்” (கம்ப. 974) என்று கூறப்பெற்றது. மான் என்பது அறிந்து போன என்பதில் உள்ள அறிதல் அசதி மொழி - மாயமானுக்கும் உண்மை மானுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் என்றபடி. திறம்புதல் - கடந்து வருதல் (முறை தவறுதல்) குறைதல் - மன எழுச்சி தளர்தல். யாவர் திறம்புவார் என்று முடிக்க. கோன் என்பது பின்னைத் திறம்புவர் குறையின் அல்லார் - ஒரு காரியம் நான் செய்தேன் என்றால் அத் தேவர்கள் அறிந்தாலும் எங்கள் இறைவன் செய்தான் என்பர் அல்லாமல் மாறுபடார். தாழ்வர் என்பது பழைய உரை (அடை - பதி) (144) | 5213. | ‘வென்றோரும் இருப்ப; யார்க்கும் மேலவர், விளிவு இலாதோர், என்றோரும்இருப்ப; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய, ஒன்றாக உலகம்மூன்றும் உணர்கின்ற ஒருவன், யானே ! மென்தோளாய் !இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ ? |
மென் தோளாய் !- மெல்லிய தோளையுடையவளே; வென்றோரும் இருப்ப - என்னை வென்ற வாலி முதலானோர் இருக்கவும்; யார்க்கும் மேலவர் - எவர்க்கும் மேலாய மும்மூர்த்திகளும்; விளிவு இலாதோர் என்றோரும் இருப்ப - அழிவற்றவர் என்று பேசப்படும் தேவர்களும் இருக்கவும்; அன்றே - அந்த நாளிலிருந்து; இந்திரன் ஏவல் செய்ய - இந்திரன் அடிமைப் பணி செய்ய; உலகம் மூன்றும் - மூன்று உலகங்களையும்; ஒன்றாக உணர்கின்ற - ஒரு சேர ஆட்சியுணர்வு செய்கின்ற; ஒருவன் - ஒப்பற்றவன்; யானே - யானே ஆவேன் இதற்கு - இவ்வாறு யான் ஆள்வதற்கு வேறு ஓர் காரணம் - பிறிதொரு காரணத்தை; விரிப்பது உண்டா - விளக்கிக் கூறுவதற்குள்ளதா ? என்னினும்மேலானவர் இருப்பின் அவர்கள் என்னை அடக்கியிருக்கலாமே. அவ்வாறு நேராமையின் யானே பெரியவன் என்பது இராவணன் எண்ணம். (145) | 5214. | ‘மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம், பாவை ! நின்பொருட்டினால், ஓர் பழி பெற, பயன் தீர் நோன்பின் |
|